Durga | குங்குமம்.. விபூதி.. பெரிய மீசை தாடி.. அலறடிக்கும் லாரன்ஸ்.. இது 'துர்கா’ அப்டேட்!
நடிகர் ராகவா லாரன்ஸின் புதுப்பட அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸின் புதுப்பட அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு துர்கா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். பெரிய தாடி, பெரிய மீசை என நெற்றியில் குங்குமம், விபூஷி பட்டையுடன் சாமியார் கெட்டப்பில் அதிர வைக்கிறார் லாரன்ஸ். இது குறித்து பதிவிட்டுள்ள லாரன்ஸ், உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை என்ற தலைப்போடு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். படம் குறித்தான வேறு எந்த அப்டேட்டும் இப்போது வெளியாகவில்லை. விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Durga !!!
— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2021
Need all your blessings 🙏🏻 pic.twitter.com/pVYNepkgFM
முனி வெற்றிக்கு பிறகு திகில் படங்களில் கவனம் செலுத்தும் லாரன்ஸ், காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர்ச்சியான படங்களை இயக்கினார். காஞ்சனாவின் இந்தி ரீமேக்கும் லக்ஷ்மி என்ற பெயரில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஹாரரை கையில் எடுத்து தமிழுக்கு திரும்பியுள்ளார் லாரன்ஸ்.
தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் லாரன்ஸ். விரைவில் துர்கா படத்தின் பூஜை நடைபெறும் என்றும், அப்போது மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
துர்கா பர்ஸ்ட் லுக்கிற்கு ட்விட்டரில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
First Look of @offl_Lawrence next film #Durga pic.twitter.com/GlJzEmFHLC
— Ram Muthuram Cinemas (@RamCinemas) August 6, 2021
. @offl_Lawrence's #RagavendraProductions Next titled as #Durga, More updates coming soon !
— Ramesh Bala (@rameshlaus) August 6, 2021
Stay Tuned pic.twitter.com/f01fQ7rtSx
#Durga | Raghava Lawrance 💥 pic.twitter.com/j1QM0mmmMw
— Christopher Kanagaraj (@CKReview1) August 6, 2021
.@offl_Lawrence 's #RagavendraProductions next is Titled #Durga #RaghavaLawrence pic.twitter.com/YKKXx68CIl
— BARaju's Team (@baraju_SuperHit) August 6, 2021