மேலும் அறிய

Rajinikanth: வேட்டையன் ஷூட்டிங்குக்காக தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த்.. தென் தமிழக மக்கள் அதிருப்தி..

Rajinikanth வேட்டையன் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தூத்துக்குடி சென்றுள்ளார்.

வேட்டையன்

ரஜினிகாந்தின் 171 ஆவது படத்திற்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரானா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

முழுவீச்சில் படப்பிடிப்பு

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது,. முன்னதாக கேரளா, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு ஊர்களுக்கும் ரஜினிகாந்த் செல்லும்போது அங்கு ரஜினி ரசிகர்கள் திரண்டு அவரை வரவேற்று வருகிறார்கள். மேலும் படப்பிடிப்புத் தவிர்த்து தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி(Rajinikanth). சில ஆக்‌ஷன் காட்சிகளின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்தில்  நடிகை ரித்திகா சிங்  காயமடைந்தார். தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது தூத்துக்குடி  விமான நிலையத்தில் காத்திருந்த ரசிகர்கள் ரஜினிக்கு வழக்கம்போல் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தென் தமிழ்நாட்டுவாசிகள் எதிர்ப்பு

மற்றொருபுறம் நடிகர் ரஜினிகாந்த் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம் குறித்து எதுவும் கவலை தெரிவிக்காதது தென் தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை அந்தப் பகுதிகளை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ள நிலையில், இது குறித்து ரஜினிகாந்த் எதுவும் தெரிவிக்காதது அப்பகுதி இணையவாசிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள நிலையில் ரசிகர்கள் எதிர்ப்பு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

தலைவர் 171

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் 171 ஆவது படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான் கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின, மேலும் இந்தப் படத்தில் ராகவா லாரண்ஸ் வில்லனாக நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. அடுத்த சில மாதங்களுக்கு இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுத இருக்கும் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் இருந்து சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஐமேக்ஸ் கேமராவில் எடுக்க திட்டமிட்டிருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

லால் சலாம்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் லால் சலாம் .விஷ்ணு விஷால் , விக்ராந்த் இருவரும் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்து லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லால் சலாம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் ஒத்திப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Breaking News LIVE: கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
கள்ளச்சாராயம் குடித்த 12 பேருக்கு பார்வை பறிபோனது - மருத்துவர்கள் தகவல்..!
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
T20 World Cup 2024: அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
Thalapathy Vijay: தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
Embed widget