Indian 2: அல்டிமேட் காம்போ...கமலுடன் இணையும் பிரபல நடிகர்? இந்த அப்டேட் தெரியுமா?
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் பிரபல நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘இந்தியன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
Actor #Karthik is onboard for @ikamalhaasan #Indian2#Kamalhaasan @shankarshanmugh pic.twitter.com/kvWreRERsP
— Siva Prasanth (@Sivaprasanth5) August 7, 2022
அந்த வகையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியன்-2 படத்தின் அறிவிப்பு வெளியானது. 2018 ஆம் ஆண்டு இதன் அறிவிப்பு வெளியாகி 2019 ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பு நடந்து வந்தது. அனிருத் இசையமைப்பில் காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் , கிரேன் நிலை தடுமாறி கீழே விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது காலம் படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்க சென்று விட்டார். அதன்பின்னர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கருக்கு மோதல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்று போனது.
அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு, நடிகர் விவேக் மரணம், காஜல் அகர்வால் குழந்தை பெற்றது போன்ற பல நிகழ்வுகளால் மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சினிமாவுக்கு விலக்கு அளித்துள்ள காஜலுக்கு பதிலாக இப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தான் இப்படத்தை நடிக்கவுள்ளதை காஜல் அகர்வால் உறுதி செய்தார். மேலும் படப்பிடிப்பு செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விவேக் நடித்த கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் படக்குழு சார்பில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்