sherlock Holmes: மரணத்தை துப்பு துலக்கும் பாய்ண்ட்! செர்லாக் ஹோம்ஸ் நாவலின் ஒரே பக்கம் ரூ.3.13 கோடிக்கு ஏலம்!
புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளார் ஆர்தர் கொனன் டொயில், தனது புதினங்கள் மற்றும் எண்ணற்ற சிறுகதைகள் மூலம் செர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.
செர்காக் ஹோம்ஸ் கதாபாத்திரிம் தோன்றிய நான்கு புதினங்களில் ஒன்றான ஹவுண்ட் ஆஃப் பாஸ்கர்வில்லீஸ் (The Hound of the Baskervilles) என்ற புதினத்தின் பக்கம் ஒன்று 3.13 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளார் ஆர்தர் கொனன் டொயில், தனது புதினங்கள் மற்றும் எண்ணற்ற சிறுகதைகள் மூலம் செர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.
1887-ம் ஆண்டு வெளியான எ ஸ்டடி இன் ஸ்கார்லெட் புதினத்தில் முதலில் தோன்றிய ஹோம்ஸ் கதாபாத்திரம், தி சைன் ஆஃப் ஃபோர் (The Sign of the Four, 1890), தி ஹவுண்ட் ஆஃப் பாஸ்கர்வில்லீஸ் (The Hound of the Baskervilles, 1901–1902), தி வேலி ஆஃப் பியர் (The Valley of Fear, 1914–1915) என மொத்தம் நான்கு புதினங்கள் மற்றும் 56 சிறுகதைகளில் தோன்றியுள்ளார். தனது கூர்மையான தர்க்க முறை சிந்தனை, பகுத்தறிவு திறன், தடயவியல் திறன் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான குற்றங்களைப் புலனாய்வதில் வல்லவர். இந்த, கதாபாத்திரம் உலகெங்கும் வாழும் வெகுஜன மக்களைக் கவர்ந்தது.
செர்லாக்கின் கதைகளைக் களமாகக் கொண்டு பல நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் மட்டுமல்லாது தடயவியல், குற்றவியல் துறைகளிலும் ஓம்சு கதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒம்சின் ரசிகர்களின் எண்ணிக்கை பல தலைமுறைகளைக் கடந்தும் குறையாது உள்ளது. பல மொழிகளில் மொழிபெயர்ப்புகள், ரசிகர் சங்கங்கள், அருங்காட்சியகங்கள் என இன்றளவும் ஹோம்ஸ் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது
ஏலம்:
அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் செயல்பட்டு வரும் Heritage Auctions என்ற ஏல நிறுவனம், செர்லாக் ஹோம்ஸ் புதினங்களின் பரப்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 1902ம் ஆண்டு ஆர்தர் கொனன் டொயில் கைப்பட எழுதிய, 'தி ஹவுண்ட் ஆஃப் பாஸ்கர்வில்லீஸ்'புதினத்தின் 13வது அத்தியாத்தில் (Fixing the Nets) உள்ள பக்கத்தை ஏலம் விட்டது. இதனை, தனிநபர் ஒருவர் 3. 13 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
செர்லாக் ஹோம்ஸ் மற்றும் அவரது நண்பர் டாக்டர் ஜான். எச். வாட்சன் இருவரும் புதர் சூழ்ந்த தரிசுவெளிக் காட்டில் நின்று கொண்டு, மரணத்தை துப்பு துலக்கும் நிகழ்வுகள் அந்த பக்கத்தில் எழுதப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்