மேலும் அறிய

Manisha Koirala | ’ஆல்யாவும் கங்கனாவும்தான் எனக்கு பிடிக்கும் ஏன் தெரியுமா? - மனிஷா கொய்ராலா பளீச் பதில்!

சமீபத்தில் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான இந்தியா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் என்னும் திரைப்படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.

இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான Pheri Bhetaula என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் இந்தியன் , முதல்வன், பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில், ஹீரோவுக்கு மாமியாராக நடித்து அசத்தியிருந்தார். 2012-ஆம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா ஒருவருட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டார். தற்போது புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manisha Koirala (@m_koirala)

சமீபத்தில் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான ‘இந்தியா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் என்னும் திரைப்படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. அதில் இந்திய- அமெரிக்க வம்சாவளி பெண்ணாக நடித்திருந்தார் மனிஷா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று மனிஷா கொய்ராலாவிடம் நேர்காணல் நடத்தியது. அதில் தனது வாழ்க்கை மற்றும் எதிர்கால திட்டம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் மனிஷா கொய்ராலா.தான் நடித்த படம் மற்றும் அமெரிக்க , இந்திய கலாச்சாரம் குறித்து பேசிய மனிஷா, கலாச்சார பேசும் திரைப்படங்கள் என்பதை தாண்டி உலக மக்கள் அனைவரும் தனிமனிதனின் கதையால் ஒன்றிணைவார்கள் என்றார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manisha Koirala (@m_koirala)


மேலும் இளம் தலைமுறைகளில் யார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு, ”இன்றைய இளைய தலைமுறையினர் சிறப்பாக செயல்படுகிறார்கள் .அவர்கள் அனைவரும்  உலகத் தரத்திற்கு இணையாக நடிக்கிறார்கள். கார்த்திக் ஆர்யன் ,ரன்பீர் கபூர் சிறந்தவர்ஆகியோர் சிறப்பாக நடிக்கிறார்கள். நடிகைகளில்  ஆலியா பட்டின் நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன். நான் நடித்ததை விடவும் சிறப்பாக நடிக்கிறார் ஆல்யா. கங்கனா ஒரு புத்திசாலி நடிகை . குயின் படத்தில் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என பாராட்டியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget