Harija: நெருக்கமா இருக்காங்க.. ஆனால் விரைவில் Divorce... எருமசாணி ஹரிஜா லேட்டஸ்ட் போஸ்ட்!
எருமசாணி என்ற யூடியூப் பக்கம் மூலம் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் ஹரிஜா
எருமசாணி ஹரிஜாவுக்கு விவாகரத்தா என்ற இணையத்தின் கேள்விக்கு அவரது கணவர் ஒரே புகைப்படம் மூலம் பதில் அளித்துள்ளார். Divorce தான் ஆனால் வேற மாதிரி என்பதுபோல போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்
டிஜிட்டல் உலகில் அதிகம் அறியப்பட்டவர் ஹரிஜா. எருமசாணி என்ற யூடியூப் பக்கம் மூலம் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் ஹரிஜா. தொடர்ந்து பல ஷார்ட் பிலிம்களிலும் நடித்து வந்த ஹெரிஜா 2018-ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது குழந்தையும் உள்ளது.
View this post on Instagram
நடிப்புக்கு சிறிதுகாலம் ஓய்வு கொடுத்திருந்த ஹரிஜா தற்போது படம் ஒன்றில் நடித்துள்ளார். தன் கணவருடன் இணைந்து Divorce என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஹரிஜா. இந்தப்படம் மே மாதம் வெளியாகும் என தெரிகிறது. இது குறித்து பதிவிட்டுள்ள ஹரிஜாவின் கணவர், வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் என்ன விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் இருவரும் அறிவோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
முன்னதாக ஹரிஜாவுக்கு விவாகரத்தா என இணைய ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் இது கணவருடன் இணையும் Divorce என தற்போது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்