மேலும் அறிய

"ஆங்காரமாய் ஆடியது போதும், இளைப்பாறுங்கள் அப்பா” - தங்கராஜ் மறைவிற்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் உருக்கம்...

தங்கராஜ் அனைவரின் மனதிற்குள்ளும் சென்று அகத்தையும் ஒவ்வொருவரின் சுயத்தையும் கேள்வி கேட்டவர். அவரின் கனவு பயணம் மிகத் தாமதமாகதான் தொடங்கியது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் சமூகத்தின் அவலம் குறித்த கேள்விகளை முன்வைத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ். காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார், அவரது உடல் அஞ்சலிக்காக நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், வாழை படப்பிடிப்பு தளத்திலிருந்து நேரடியாக வருகை தந்து நெல்லை தங்கராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


பரியேறும் பெருமாள் படத்தில் அப்பாவாக நடித்திருந்தார். மிகச் சிறந்த ஆளுமை. எங்கள் இருவருக்கும் அப்பா பையன் உறவு இருந்தது. இன்று காலையில் இறந்த செய்தி வரும் பொழுது படப்பிடிப்பில் தான் இருந்தேன். தனது குடும்பத்தையும் தன்னையும் காப்பாற்ற தொடர்ந்து உழைத்தவர். கிடைத்த ஒரே வாய்ப்பில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தங்கராஜ் என்று புகழாரம் சூட்டினார்.

அதேபோன்று தேடி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைஞரான தங்கராஜ் அனைவரின் மனதிற்குள்ளும் சென்று அகத்தையும் ஒவ்வொருவரின் சுயத்தையும் கேள்வி கேட்டவர். அவரின் கனவு பயணம் மிகத் தாமதமாகதான் தொடங்கியது. அது இவ்வளவு சீக்கிரம் முடியும் என நினைத்து பார்க்கவில்லை என்றார். தொடர்ந்து அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டவர் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஆங்காரமாய் ஆடியது போதும், இளைப்பாறுங்கள் அப்பா” 💔 ”என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும்” என்று உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  மேலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் மறைந்த கூத்துக்கலைஞர் தங்கராஜின் உடல் நாளை காலை 8 மணி அளவில் எரியூட்டப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!
உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!
Varshini Venkat: இளைஞரை மிரட்டி பணம் பறித்த விவகாரம்.. பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது!
Varshini Venkat: இளைஞரை மிரட்டி பணம் பறித்த விவகாரம்.. பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது!
விஜய்க்கு எதிராக ஸ்கெட்ச்.. அஜித் பெயரில் தொடங்கப்பட்ட 2வது கட்சி.. இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?
விஜய்க்கு எதிராக ஸ்கெட்ச்.. அஜித் பெயரில் தொடங்கப்பட்ட 2வது கட்சி.. இதுக்கு ஒரு எண்ட் இல்லையா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Chennai Metro: பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ..! 14.6KM பணிகள் முழுமையடைந்தும் திறக்கப்படாதது ஏன்? 7 மாத வெயிட்டிங்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் - சுகாதாரத்துறை அலர்ட்
TN Byelection: ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
ஆளுக்கு ஒன்னு..! வேட்பாளர்களை கைவிட்டு, DMK & ADMK கூட்டணி? சமாளிக்குமா TVK? விஜய் வியூகம் என்ன?
Tasmac Liquor Price Hike : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! பாட்டிலுக்கு ரூ.20 உயரப்போகுது.? எந்த சரக்குக்கு எவ்வளவு தெரியுமா.?
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
ஜெம் வீரமணி வழக்கு.. ஒருத்தரையும் விடக்கூடாது.. ஆக்‌ஷன் எடுத்தே ஆகணும்.. கனிமொழி கண்டனம்!
Hyundai Bayon: புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
புதிய மிட்-சைஸ் எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கிய ஹுண்டாய் - கட்டணம், விலை, அம்சங்கள், ரைவல்?
Embed widget