மேலும் அறிய

The Kerala Story : 'தி கேரளா ஸ்டோரி' உண்மைக்கு புறம்பான தவறான படம்... சினிமாவிற்கான மதிப்பு இல்லை... எடிட்டர் பினா பால்   

"தி கேரளா ஸ்டோரி" படம் உண்மையில்லாத தவறான படம். தேவையில்லாமல் அதிக மைலேஜ் கிடைத்தது தான் வருத்தமாக இருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசாமல் இருந்து இருந்தால் அது தானாகவே மரணமடைந்து இருக்கும்.

சுதிப்தோ சென் இயக்கத்தில்  இந்தியில் எடுக்கப்பட்ட படம் “தி கேரளா ஸ்டோரி”. அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி, சித்தி இத்னானி மற்றும்  தேவதர்ஷினி என பலரும் நடித்த இப்படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கதை என கூறப்பட்ட இப்படத்தில் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் லவ்ஜிகாத் என்னும் பெயரில் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டது தொடர்பாகவும், அவர்கள் ISIS அமைப்பில் சேருவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 

கேரளா ஸ்டோரி மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானதில்  இருந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் அனுராக் காஷ்யப், கமல்ஹாசன், நசிருதீன் ஷா போன்ற பிரபலங்கள் படத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அதனை தொடர்ந்து திரைப்பட எடிட்டர் பீனா பால் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இப்படத்தை உண்மையில்லாத தவறான படம் என தி கேரளா ஸ்டோரி படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

The Kerala Story : 'தி கேரளா ஸ்டோரி' உண்மைக்கு புறம்பான தவறான படம்... சினிமாவிற்கான மதிப்பு இல்லை... எடிட்டர் பினா பால்   
மேலும் இப்படத்திற்கு தேவையில்லாமல் அதிக மைலேஜ் கிடைத்தது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது. இதைப்பற்றி யாரும் பேசாமல் இருந்து இருந்தால் அது தானாகவே மரணமடைந்து இருக்கும் என தெரிவித்துள்ளார். இது ஒரு தண்டனையில்லாத சூழல். முற்றிலும் தவறான விஷயங்களை சொன்னாலும் நீங்கள் இதனால் பாதுகாக்கப்படுகிறீர்கள். உண்மையிலேயே தவறாக சித்தரிக்கப்பட்டதால் தான் ட்ரைலரை மாற்ற வேண்டியிருந்தது. அதை பற்றி யாரும் பேசவில்லை. இப்படி தண்டனையில்லாத சூழலில் இது போன்ற படங்கள் நன்றாக தான் இருக்கும் என நான் நினைக்கிறன் என்றார் பினா பால். 

அவர் மேலும் கூறுகையில், “2018ம் ஆண்டு மலையாளத்தில் பல முக்கியமான நல்ல படங்கள் வெளியாகின. ஆனால் அவற்றிக்கு வரி விலக்கு உள்ளது என்றும் உங்களை ஊக்குவிக்கிறது என்பதற்காகவும் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். நான் மிகவும் வருத்தப்படுகிறேன், ஏனென்றால் அந்த படம் தலைப்புச் செய்திகளில் வருவதற்கு எந்த காரணமும் இல்லை. இது உண்மைக்குப் புறம்பான படம். பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அது உண்மையில் தவறானது என்று ஒருவர் கேள்விப்பட்டுள்ளார். அதில் சினிமாவிற்கான எந்த மதிப்பும் இல்லை. ஆனால், ஒருவேளை இது இந்த நாட்டில் உள்ள சிலரின் விருப்பத்திற்கு உணவளிக்கும் ஒரு கதையாக இருக்கலாம். 

கேரளாவில் ஏன் இப்படம் வரவேற்கப்படவில்லை என்பது குறித்து கேட்கப்பட்ட போது அப்படம் நன்றாக இருக்காது என கேரளா பார்வையாளர்கள் கூறியதை நினைத்து பெருமைப்படுகிறேன். 2018 அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது, இது சமூகத்தை கட்டமைக்கும் கதைக்கு நேர் எதிரானது என தெரிவித்து இருந்தார் பினா பால். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
Embed widget