மேலும் அறிய

வாரிசாக வந்த துல்கர் சல்மான்..அடையாளமே இல்லாமல் வந்த சிவகார்த்திகேயன்..ஒரே நாளில் அறிமுகமாகமான இரண்டு நடிகர்கள்

தென் இந்திய சினிமாவின் இரு முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான் இன்று 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள்

கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான நாயகர்களாக அறிமுகமானார்கள். சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமானார். துல்கர் சல்மான் செகண்ட் ஷோ திரைப்படத்தில் அறிமுகமானார். இன்று பிப்ரவரி 3 ஆம் தேதி இருவரும் திரைத்துறையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

14 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவகார்த்திகேயன் 

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்த்திக் கொண்டார். அந்த வகையில் மாவீரன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதே போல் 2024 ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பராசக்தி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகராக இப்படம் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு புதுமுக இயக்குநர்களின் படங்களையும் தொடர்ச்சியாக தயாரித்து வருகிறார். அடுத்தபடியாக வெங்கட் பிரபு , ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் . 

அடுத்த படம் 

தற்போது தாய்கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. இதற்கான ஒரு ப்ரோமோஷன் வீடியோவும் விரைவில் வெளியாக இருக்கிறது. 

14 ஆண்டுகளை நிறைவு செய்யும் துல்கர் சல்மான் 

இதே நாளில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் செகண்ட் ஷோ படத்தின் மூலம் அறிமுகமானார். பிரபல நடிகரின் வாரிசு என்பதால் துல்கர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமில்லாமல் இந்தி , தமிழ் என அனைத்து மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து பெரியளவில் ரசிகர்களை சம்பாதித்துள்ளார். துல்கர் சல்மான் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான லோகா திரைப்படம் பான் இந்திய வெற்றிபெற்றது. இதனை ஒட்டி வெளியான காந்தா திரைப்படமும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் ஐ ஆம் கேம் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது 

தலைப்பு செய்திகள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Embed widget