Janhvi Kapoor Affair : அட வாங்க மாப்ள.. மருமகனின் தோள் மேல் கைபோட்ட போனி கபூர்.. ஜான்விக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!
போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராக இருந்த சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியா இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கு சென்று வந்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் ராணியாக வலம் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஏராளமான பாலிவுட் மற்றும் தமிழ் திரைப்படங்களை தயாரித்துள்ளார்; ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் இவரின் தயாரிப்பில் ஏற்கனவே வெளியான வலிமை, நேர்கொண்ட பார்வை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த திரைப்படங்கள் மட்டுமின்றி ஆர்.ஜே. பாலாஜியின் வீட்ல விசேஷம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். பாலிவுட்டில் தனது மகன் மற்றும் மகள் நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார்.

போனி கபூர் - ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் அவரது தந்தை போனி கபூர்.
View this post on Instagram
ஜான்விக்கும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராக இருந்த சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவுக்கும் இடையில் சில ஆண்டுகாலமாக பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது; இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வருவதாகவும், அவ்வப்போது ஏராளமான முக்கிய நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்த காதல் ஜோடி மாலத்தீவு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. அவர்கள் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.
View this post on Instagram
சமீபத்தில் போனி கபூரின் மகன் மற்றும் ஜான்வி கபூரின் சகோதரன் அனில் கபூரின் பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் ஷிகர் பஹாரியாவும் கலந்து கொண்டுள்ளார். போனி கபூர் அவரின் தோள் மீது கைபோட்டு மிகவும் நெருக்கமாக பேசிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டது. இதை பார்த்த நெட்டிசன்கள் மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டாரா போனி கபூர் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிலி. இந்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து இருந்தார். இவர்கள் கூட்டணியில் உருவான முதல் படம் இதுவாகும். ஜான்வி, அடுத்ததாக நிதேஷ் திவாரியின் பவால் படத்தில் வருண் தவான் ஜோடியாகவும் மிஸ்டர் & மிஸஸ் மஹி திரைப்படத்தில் ராஜ்குமார் ராவ் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.





















