Chellama Video Song: ட்ரெண்டிங்கில் பின்னிப் பெடலெடுக்கும் டாக்டர் ”செல்லம்மா” வீடியோ சாங்..
ஏற்கெனவே இவ்வளவு சாதனைகளை படைத்துள்ள இந்தப் பாடலை திரையில் மட்டுமே பார்த்து ரசித்த நிலையில், இன்று யூடியூபில் முழு வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது.
'டாக்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா’ வீடியோ பாடல் இன்று காலை வெளியான நிலையில், தற்போது 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிக்கிறது.
கோலமாவு கோகிலா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் படைப்பில் வெளியான திரைப்படம் ; டாக்டர்’ .சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். மனித கடத்தலை மையமாக வைத்து டார்க் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 9ஆம் தேதி வெளியான படம் வார நாட்களில் அரங்கம் முழுவதும் நிறைந்த காட்சிகளாகவே இருக்கிறது. இந்தப்படத்தின் இறுதியில் வரும் ‘செல்லம்மா’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்தாண்டு அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன், ஜோனிதா காந்தி ஆகியோர் இடம்பெற்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்பாடலை இதுவரை 130 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கண்டு ரசித்துள்ளனர். அத்துடன் 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. ஏற்கெனவே இவ்வளவு சாதனைகளை படைத்துள்ள இந்தப் பாடலை திரையில் மட்டுமே பார்த்து ரசித்த நிலையில், இன்று யூடியூபில் முழு வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டது. வெளியான ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்த இந்தப் பாடல், தற்போது 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் வசூல் குறித்து வெளியான தகவலின்படி, தமிழ்நாட்டில் மட்டும் டாக்டர் திரைப்படம் ரூ.41 கோடி வசூல் செய்துள்ளது. மற்ற இடங்களில் வசூலையும் சேர்த்து மொத்தமாக ரூ.60 கோடியை வசூல் செய்துள்ளதாம் டாக்டர். இதனால் டாக்டர் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் ரூ.100 கோடியை டாக்டர் நெருங்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. குறிப்பாக விஜயின் மாஸ்டர் திரைப்படம் 43900 டாலர் வசூலித்த நிலையில் அந்த வசூல் சாதனையை டாக்டர் முறியடித்துள்ளது. டாக்டர் படத்தின் வெற்றியை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினார்கள். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்