Doctor Hits 100 Crore: ரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்... உற்சாகத்தில் தயாரிப்பாளர்கள்!
Doctor Joins 100 Crore Club: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும், சிவகார்த்திகேயனின் நீண்டநாள் நண்பருமான நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம் டாக்டர். சிவகாரத்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும், யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியான டாக்டர் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டாக்டர் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், "இந்த வேற மாறி பிளாக்பஸ்டர் படத்தின் 25 நாட்களும் உங்களைச் சிரிக்க, கைதட்ட, உற்சாகப்படுத்த வைத்துள்ளது.
25 days of this vera maari BLOCKBUSTER making you laugh, clap & cheer!
— KJR Studios (@kjr_studios) November 2, 2021
We're happy to declare that #Doctor has officially grossed 100 Crores in Theatrical 🎊🎉🥳#DOCTORHits100Crs
This victory is yours as much as ours ❤️ pic.twitter.com/kMdCJk97fk
'டாக்டர்' திரைப்படம் திரையரங்குகளின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இது உங்களுக்கும் எங்களுக்குமான வெற்றி" எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் டாக்டர் படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் நான்காம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதனையடுத்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது.
😊🙏❤️ #Doctor https://t.co/E7PoF8JbSF
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) November 2, 2021
முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. தற்போது 100 கோடி ரூபாயை டாக்டர் வசூலித்ததன் மூலம் கோலிவுட்டின் 100 கோடி ரூபாய் வசூல் க்ளப் ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்