மேலும் அறிய

வாடிவாசல் அப்டேட் கேட்டதற்கு விடுதலை 2 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்: குஷியில் ரசிகர்கள்

Director Vetrimaran " இயக்குநர் வெற்றிமாறனின் பண்ணாட்டு திரை பண்பாட்டு ஆய்வகமும், வேல்ஸ் பல்கலைகழகமும் இணைந்து மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது "

இயக்குநர் வெற்றிமாறனின் பண்ணாட்டு திரை பண்பாட்டு ஆய்வகமும், வேல்ஸ் பல்கலைகழகமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு இலவச கல்வி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. மாணவர்களுக்கு இலவசமாக  இலவச கல்வி வழங்கப்படும் எனவும்,    மாணவர்கள் சமூக சூழ்நிலை கருத்தை கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நிகழ்வில் பேசிய ஐசரி கணேசன், “தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கை கோர்ப்பதில் மகிழ்ச்சி, திரைத்துறை தாண்டி இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிப்பது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இலவச திரை கல்வி வழங்கி வருகிறார் என்பது பாராட்டுக்குரியது. அவரது ஆய்வகத்தின் டிப்ளமோ பட்டமளிப்பு விழாவில் இதை தெரிந்து கொண்டேன். அதை இளநிலை முதுநிலை பட்டப்படிப்பாக மாற்ற வேண்டும் என நினைத்து தற்போது இணைந்து அதை நிறைவேற்றுகிறோம்  இது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன் "  என தெரிவித்தார்


வாடிவாசல் அப்டேட் கேட்டதற்கு விடுதலை 2 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்: குஷியில் ரசிகர்கள்

பின்னர் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “இந்த கட்டணமில்லாமல் கல்விக் கொடுப்பதற்கான  யோசனை மற்றும் பேச்சு வார்த்தைகள் அனைத்தும்  தொலைபேசியின் வாயிலாகவே நடந்து முடிந்தது சுவாரஸ்ய நிகழ்வாக கருதுகிறேன். நாங்கள் சினிமாவிற்குள் வந்த போது இருந்த கால சூழலும் தற்போதைய சினிமா சூழலும் மாறி உள்ளது. பொருளாதார, சமூக பின்புலம் சார்ந்து பார்க்காமல் அனைவரையும் ஏதோ வகையில் இணைத்து கொண்டு சினிமா கற்றுகொள்ள வழி இருந்தது. ஆனால் தற்போது பணம் அதிகம் செலவு செய்து சினிமா முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்றும் அனைவருக்கும் இலவச திரைக் கல்வி கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து தொடங்கினேன். இந்த நேரத்தில் வெற்றி துரைசாமியை நினைவு கூர்கிறேன். அவர் தான் பண்ணாட்டு திரை பண்பாடு ஆய்வகத்திற்கு இடம் கொடுத்தார். இன்று திரை என்பது சினிமா மட்டும் அல்ல யூட்யூபர், மீம் கிரியேட்டர் ஆவதும் முக்கியம் தான் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் மாணவர்களாக இருப்பார்கள்.  ஊடகம் எந்த வடிவில் இருந்தாலும் அதை   எப்படி கையாளாக வேண்டும் என்ற கலையை தெரிந்து இருக்க வேண்டும். ”  என தெரிவித்தார்.

 

அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

 

இறுதியாக செய்தியாளர்கள் கேள்விக்கு இருவரும் பதிலளித்தனர். அப்போது இளைஞர் மத்தியில் போதை பழக்கம் அதிகரிப்பு குறித்து பதிலளித்த வெற்றி மாறன், “நமது வாழ்க்கை நமது கையில் என்பதை நாம் உறுதி செய்யவேண்டும். நான் அதிக அளவு சிகெரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். அதில் இருந்து மீண்டு வந்தேன். எனவே போதை பழக்கம் போன்ற அனைத்து பழக்கத்தில் இருந்தும் வெளி வர முடியும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் உரையாடலை தொடங்க வேண்டும், பெற்றோரும் பேசுவதுடன் இல்லாமல் அவர்கள் எந்த வித பழக்கத்திற்கும் அடிமையாக இருக்க கூடாது.  போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  யாரும் எந்த விஷயத்திற்கும் அடிமையாக இருக்கக் கூடாது,  நானும் ஒரு காலகட்டத்தில்   சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்தேன்.  அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.

 


வாடிவாசல் அப்டேட் கேட்டதற்கு விடுதலை 2 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்: குஷியில் ரசிகர்கள்

வாடிவாசல் அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்து  பேசுகையில், விடுதலை 2 படப்பிடிப்பு 20 நாட்களில் நிறைவடைகிறது. வரும் காலத்தில் ஐசரி கணேஷன் தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு இருக்கிறது.  பாடல் எழுதியவருக்கு சொந்தமா அல்லது இசை   சொந்தமா என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  இருவரும் பதில் அளிக்காமல் நன்றி தெரிவித்து விட்டு சென்றனர் .

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget