Winner: இதை கவனிக்கவே இல்லயே! வின்னர் திரைப்படத்தில் ஒரே பாட்டில் இரண்டு ஹீரோயின் - என்ன கதை?
பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படத்தில் முதன்முதலில் நாயகியாக நடிக்க வேறு ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதாக இயக்குனர் சுந்தர்.சி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் டாப் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் பிரசாந்த். 2000 காலகட்டம் வரை கொடிகட்டிப் பறந்தவர், தொடர் தோல்வி படங்கள் காரணமாக சரிவைச் சந்தித்தார். ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட மாஸ் ஹீரோவாக உலா வந்த பிரசாந்த் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
பிரசாந்தின் வின்னர்:
கோட் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பிரசாந்த் ஒரு ரவுண்ட் வருவார் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சுந்தர் சி- பிரசாந்துடன் இணைந்து தனியார் யூ டியூப் சேனலுக்கு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருப்பார்.
அதில், வின்னர் படம் பற்றி நாம் யாரும் அறிந்திராத தகவல்களை பகிர்ந்திருப்பார். அதாவது, சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் நாயகியாக நடிகை கிரண் நடித்திருப்பார். ஆனால், அந்த படத்தில் முதன்முதலில் வேறு ஒரு நடிகையே நாயகியாக நடித்ததாகவும், பின்னர் அவர் படப்பிடிப்பிற்கு வராத காரணத்தால் கிரணை நாயகியாக ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல் பகிர்ந்துள்ளார்.
முதல் ஹீரோயின் பாதி, இரண்டாம் ஹீரோயின் மீதி:
அதுமட்டுமின்றி, முதலில் ஒப்பந்தம் செய்த நாயகியை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு முடித்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு அவர் வரவில்லை என்றும், இருந்தாலும் மத்தாப்பூ சேலைக்காரி பாடலில் முதலில் ஒப்பந்தம் செய்த நாயகி இடம்பெற்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
முதலில் ஒப்பந்தமான ஹீரோயின் பெயர் பற்றி அவர் சுந்தர்.சி சொல்லவில்லை. ஆனால், முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஆர்த்தி அகர்வால் என்று கூறப்படுகிறது. அவர் தமிழில் பம்பர கண்ணாலே படத்தில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி:
சுந்தர் சி இயக்கத்தில் 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வின்னர் திரைப்படம். அப்போது தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். சுந்தர் சி கதை, திரைக்கதை எழுதி இயக்கிய இந்த படத்தில் பிரசாந்த், கிரண் ஆகியோருடன் வடிவேலு, பழம்பெரும் நடிகர்கள் நம்பியார், எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் ரியாஸ் கான், ராஜ்கபூர், சந்தான பாரதி, அனுராதா ஆகியோரும் நடித்திருப்பார்கள்.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடைசியாக ப்ளாக்பஸ்டர் அடித்த திரைப்படமாக வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அதற்கு அடுத்து சொல்லிக்கொள்ளும்படி பெரிய படங்கள் ஏதும் அமையவில்லை. சுந்தர்.சி இது மட்டுமின்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: Rasavathi Movie Review : அர்ஜூன் தாஸ் நடிப்பில் ரசவாதி.. வொர்க் அவுட் ஆனதா? திரை விமர்சனம் இதோ
மேலும் படிக்க: Isari Ganesh on Simbu : 'தக் லைஃப்' படத்தில் சிம்பு நடிப்பதில் சிக்கல்... தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் புகார்...





















