Brahmastra: வரம்புகளுக்கு அப்பாற்பட்ட படம் "பிரம்மாஸ்திரா".. வாயைபிளக்கும் பாகுபலி இயக்குநர்!
Brahmastra press meet at Chennai: நமது அற்புதமான உலகம் பற்றியும் அஸ்தரங்கள் பற்றியும் நாம் நமது புராணங்களின் மூலம் தான் தெரிந்து கொண்டுள்ளோம். அதை நமக்கு திரையில் கொண்டு வந்து இருக்கிறார் அயன் முகர்ஜி
SS. Rajamouli in Bhramastra : நானும் இதில் ஒரு அங்கம் என்பதில் பெருமை...ராஜமௌலியின் அபிமானம்
பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்டமான திரைப்படங்களை இயற்றிய புகழ் பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி "பிரம்மாஸ்திரா" திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் தெலுங்குவில் வெளியிட உள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது :
சமீபத்தில் "பிரம்மாஸ்திரா" திரைப்படம் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று சென்னையில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது ராஜமௌலி வெளியாக இருக்கும் "பிரம்மாஸ்திரா" திரைப்படம் குறித்த தனது அபிமானத்தை பற்றி பேசினார். படத்தின் இயக்குனரான அயன் முகர்ஜி, இதுவரையில் யாரும் பார்க்காத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் அவரது கனவு". நமது அற்புதமான உலகம் பற்றியும் அஸ்தரங்கள் பற்றியும் நாம் நமது புராணங்களின் மூலம் தான் தெரிந்து கொண்டுள்ளோம். நாம் குழந்தைகளாக இருக்கும் போது அவற்றை பற்றி அறிந்திருப்போம் ஆனால் அதன் சிறப்பு பற்றி தெரிந்து இருக்க வாய்ப்புகள் இல்லை. அதை நமக்கு திரையில் கொண்டு வந்து இருக்கிறார் அயன் முகர்ஜி" என்றார் ராஜமௌலி.
Video: Ranbir Kapoor, SS Rajamouli and Nagarjuna enjoy traditional meal as they promote #Brahmastra in Chennai. #TeamBrahmastraInChennai pic.twitter.com/F88CMK5i1Y
— Ranbir Kapoor Universe (@RanbirKUniverse) August 24, 2022
நீண்ட நாள் கனவு நிஜமானது :
இந்த படம் குறித்த கனவு பயணத்தை பல ஆண்டுகளாக மெருகேற்றி தற்போது நிஜமாகியுள்ளார் அயன். இப்படத்தில் கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா மற்றும் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த அற்புதமான பயணத்தில் என்னையும் ஒரு அங்கமாக மாற்றியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றார் ராஜமவுலி.
வரம்புகளை மீறிய படம் :
இந்த படத்தில் எனக்கு பிடித்த பகுதி என்வென்றால் அயன் ஒரு சாதாரண உலகத்தை உருவாக்கவில்லை. வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை உருவாக்கியுள்ளார். விசித்திரமான படம் போல் அல்லாமல் ஒரு வணிக ரீதியாக கதையை கொண்டு சென்றது தான் இப்படத்தின் முக்கிய அம்சம்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நாகர்ஜூனா..
நாகர்ஜூனா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இப்படம் குறித்து பேசுகையில் "தமிழ் படத்தில் மூன்று நான்கு திரைப்படங்கள் நடித்துள்ளேன். மேலும் பாலிவுட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்தது. இந்த படத்தில் நான் நடிக்க காரணம் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் என்னை மிகவும் ஈர்த்தது. அது தான் என்னை இப்படத்தின் ஒரு அங்கமாக ஆகியுள்ளது" என்றார் நாகார்ஜூனா.
செப்டம்பர் 9ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் ராஜமௌலி இப்படத்தின் ஒரு அங்கம் என்பதால் இதன் எதிர்பார்ப்பு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களுக்கு இருந்ததை விடவும் அதிகமாகவே உள்ளது.