மேலும் அறிய

Shankar Tweet about PS : நீங்க சினிமா கிங்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை வேற லெவல்.. PS1 படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!

"இயக்குனர் மணிரத்னம்  சினிமாவின் கிங் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்" பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் லேட்டஸ்ட் ட்வீட்

பொன்னியின் செல்வன் காவிய திரைப்படத்திற்கு பல பிரபலங்களும் தங்களின் விமர்சனங்களை வழங்கி வரும் நிலையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு ட்விட்டர் மூலம்  தெரிவித்துள்ளார். 

 

Shankar Tweet about PS : நீங்க சினிமா கிங்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை வேற லெவல்.. PS1 படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!


தமிழ் சினிமாவின் இமாலய சாதனை :

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. அமரர் கல்கியின் சரித்திர நாவலை உருவகப்படுத்தி திரையில் நம் கண்முன் கொண்டு வந்த பெருமை முழுவதும் இயக்குனர் மணிரத்னத்தையே சேரும். இப்படம் வெளியான சில நாட்களிலேயே சாதனை படைத்து 250 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. 

 

ரசிகர்கள், திரை விமர்சகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் இப்படத்தினை கொண்டாடி வரும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஷங்கர் பொன்னியின் செல்வன் படம் குறித்த ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில் "பல வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கும் ஒரு தரமான தமிழ் சரித்திர படம். இயக்குனர் மணிரத்னம் சினிமாவின் கிங் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ரவிவர்மாவின் ஒளிப்பதிவிற்கு ஹாட்ஸ் ஆஃப். ஏ.ஆர். ரஹ்மானின் இசை எனக்குள் நுழைந்து ஆழமாக பதிந்து விட்டது. 3 மணி நேரமும் நம்மை தனது இசையில் ஆக்கிரமித்து விட்டார்.

இந்த காவிய திரைப்படத்தை நமக்கு அளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்" என ட்விட்டர் மூலம்  பதிவிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் இயக்குனர் மணிரத்னம் தான் முதல் பான் இந்தியா இயக்குனர் என தெரிவித்து இருந்தார் இயக்குனர் ஷங்கர். 

 

 

இயக்குனர் ஷங்கர் இரண்டு படங்களில் பிஸி :

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2 . சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனுடன் நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தையும் இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

அதனால் தன்னுடன் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய மூன்று முன்னணி இயக்குனர்களான வசந்த பாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகிய மூவரும் இயக்குனர் ஷங்கருடன் இணைந்துள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகளை  இயக்குனர் ஷங்கர் படமாக்க மற்ற நடிகர்களின் காட்சிகளை அவரின் உதவி இயக்குனர்கள் மேற்கொள்ள உள்ளனர் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. 1996 வெளியான இந்தியன் திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது என்பதால் இதன் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget