மேலும் அறிய

”கார்த்திக்கை புரிந்து கொள்வதற்குள் படமே ஓவர் “ - இயக்குநர் செல்வா சுவாரஸ்யம்!

"அந்த சமயத்துல கார்த்திக் சார் ஷூட்டிங் லேட்டா வருவாரு அந்த மாதிரியான செய்திகள் எல்லாம் வந்துட்டு இருந்துச்சு ."

தென்னிந்திய சினிமா கொண்டாடும் நாயகனான அஜித் குமாரை அறிமுகப்படுத்திய பெருமை இயக்குநர் செல்வா அவர்களைத்தான் சேரும் . தமிழ் சினிமாவிற்கு தலைவாசல் என்னும் திரைப்படம் மூலமாக எண்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் செல்வா. அதன் பிறகு அமராவதி என்னும் படத்தை இயக்கினார். இந்த படத்தில்தான் அஜித் குமார் அறிமுகமானார். இந்த படங்களை தொடர்ந்து கர்ணா , பூவேலி, ஜேம்ஸ் பாண்ட், உன்னருகே நான் இருந்தால் , ஸ்டூடண்ட்  நம்பர் 1 , நான் அவனில்லை நேர்த்தியான சில படங்களை இயக்கியிருக்கிறார். பூவேலி திரைப்படம் இயக்குவதற்கு முன்னதாக கார்த்திக்கை வைத்து சிஷ்யா என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார் செல்வா. அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட சமயத்தில் கார்த்திக் ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை போன்ற செய்திகள் உலா வந்த சமயம் .  இது குறித்து மனம் திறந்திருக்கிறார் இயக்குநர் செல்வா.

”கார்த்திக்கை புரிந்து கொள்வதற்குள் படமே ஓவர் “ - இயக்குநர் செல்வா சுவாரஸ்யம்!

“ நான் ஒரு கதை பண்ணேன். அதுக்குள்ள கார்த்திக் சார் ஃபிட்டாயிட்டாரு. ஆனாலும் கார்த்திக் சாருக்கு ஏற்ற படமா என அவரை புரிந்துக்கொள்வதற்குள்ளாகவே படம் முடிந்து விட்டது.  படம் முடிந்த பிறகுதான் எனக்கு படத்துல சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாமோனு தோணுச்சு.அந்த சமயத்துல கார்த்திக் சார் ஷூட்டிங் லேட்டா வருவாரு அந்த மாதிரியான செய்திகள் எல்லாம் வந்துட்டு இருந்துச்சு . ஆனால் அவர் என்னோட ஷூட்டிங்லாம் சரியாகத்தான் வந்தாரு.. சிஷ்யா படம் நல்ல வரவேற்பை பெறல . அடுத்த படத்துல கார்த்திக் சாருடைய திறமைய நல்லா பயன்படுத்தனும்னுதான் பூவேலி திரைப்படத்தை எடுத்தேன். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காவிட்டாலும் இரண்டாவது படத்தை எனக்கு கார்த்தி சார் கொடுக்க காரணம் . எங்கள் இருவருக்குமான நட்பும் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான். நாங்க சிஷ்யா சமயத்தில் நிறைய படங்களை பற்றியும் , சில காட்சிகள் உருவாகியிருக்கும் விதம் குறித்தும் பேசுவோம். சினிமா பற்றி அதிகமாக பேசியதாலோ என்னவோ எங்களுக்குள் நல்ல நட்பு உருவானது . அதன் அடிப்படையில்தான் பூவேலி திரைப்படம் உருவானது. ” என தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வா.

”கார்த்திக்கை புரிந்து கொள்வதற்குள் படமே ஓவர் “ - இயக்குநர் செல்வா சுவாரஸ்யம்!

பூவேலி திரைப்படம்  1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் . இந்த படம் வாங்கிக் இன் தி கிளவுட் என்னும்  ஆங்கில படத்தில் தழுவலில் எடுக்கப்பட்டது. 100 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடிய படங்களுள் ஒன்று.படத்தில் கார்த்தியுடன் அப்பாஸ், கௌசல்யா , ஹீரா உள்ளிட்ட  பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பரத்வாஜ் இசையில் 10 பாடல்கள் இடம்பெற்றிருந்தது .படத்தை பாலச்சந்தரின் கவிதாலயா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளராக களமிறங்கும் அஜித்...நாளை வெளியாகும் AK 64 படத்தின் அப்டேட்
தயாரிப்பாளராக களமிறங்கும் அஜித்...நாளை வெளியாகும் AK 64 படத்தின் அப்டேட்
லிங்கம் தொடர் இயக்குநர் , எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்
லிங்கம் தொடர் இயக்குநர் , எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நேர்காணல்
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்
பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்த ரவிமோகன்..என்ன நடந்தது?
பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்த ரவிமோகன்..என்ன நடந்தது?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
Embed widget