மேலும் அறிய

”அந்த படம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு; என் பொழப்பே போயிடுச்சு“ - சிந்து சமவெளி இயக்குநர் சாமி வருத்தம்!

"என் குழந்தை பிறந்திருக்கு. அப்போ வீட்டில் கல்லை விட்டு எரிந்தாங்க. என் அம்மா அப்போ கேட்டாங்க ஏம்பா.."

அமலாபால் மற்றும் ஹரிஷ் கல்யாண் அறிமுக நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிந்து சமவெளி ‘. இந்த படத்தை மைக்கல் ராயப்பன் தயாரித்திருந்தார். சாமி படத்தை இயக்கியிருந்தார். முக்கோண காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்றளவும் சமூக வலைத்தளங்களில் சிந்து சமவெளி திரைப்படம் கேலிக்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சிந்து சமவெளி படத்தை நான் எடுத்திருக்க கூடாது என வருத்தப்படுகிறார் இயக்குநர் சாமி.



”அந்த படம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு; என் பொழப்பே போயிடுச்சு“ - சிந்து சமவெளி இயக்குநர் சாமி வருத்தம்!

 

அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் கூறியதாவது :

"உயிர் படத்துல தொடங்கி உதவி இயக்குநராக வாழ்க்கை 10 வருடம். பார்த்திபன் சார், சேரன் சார், எஸ்.ஏ. சந்திர சேகர் சார் அப்படினு  10 வருடங்கள் பணியாற்றியிருக்கேன். 2005 இல் உயிர், 2006இல் மிருகம், 2008 இல் சரித்திரம், 2010 இல் சிந்து சமவெளினு ராக்கெட் வேகத்தில் போச்சு. அதற்கு இடையில்  மூன்று படம் இடையிலேயே நின்னுடுச்சு. மொத்தம் 7 படம். சிந்து சமவெளி படம் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு. நான் சரித்திரம் படத்தை ஒரு மினி பாகுபலியா எடுத்தேன். அந்த படம் சிலம்ப கலையில் டாக்குமெண்டரியாக எடுத்தேன். நல்ல கமர்ஷியல் படம்தான் இரண்டு வருடங்கள் களப்பணி செய்து பண்ணினேன். படம் வெளியகாவில்லை. ராஜ்கிரண் சார் நடிச்சிருந்தாரு. போஸ்டருக்கே நிறைய செலவு பண்ணினோம். எண்டர் தி டிராகன், நாக் அவுட், டிராக்கி போல நம்முடைய பாரம்பரிய கலையை ஏன் முழு நீள படமாக எடுக்கவில்லை என ஏக்கம் இருந்தது.  அதற்கு காரணம் என் அப்பா சிலம்பம் கற்றுக்கொண்டவர். அவரது குருநாதருடைய பெயர் அழகர்சாமி. அதை வைத்துதான் படம் எடுக்க திட்டமிட்டேன். அந்த படம் வெளியாகியிருந்தால் எனது கெரியர் மாறியிருக்கும். அதன் பிறகு சர்வைவல் பிரச்சனையாகிடுச்சு. அப்போ ஒரு நண்பர் தயாரிப்பாளரிடம் அழைத்துச்சென்றார்.

நான் அவங்களிடம் 4 கதை சொன்னேன். இப்போ என் வீட்டு அலமாரியில் 20-25 கதைகள் இருக்கு. அப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளரிடம் போகும் நான் தயாரிப்பாளரிடம் என்ன கதை என கேட்பேன், என்ன மாதிரியாக படம் பண்ண விரும்புறீங்கன்னு கேட்பேன். அதற்கு ஏற்ற மாதிரியாக கதை சொல்லுவேன். அப்போ என்னிடம் சர்ச்சையான கதையா சொல்லுங்க அப்படினு கேட்பாங்க. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க சார் அப்படினு சொல்லி யோசிச்சேன். அப்போதான் ரஷ்யன் எழுத்தாளர் எழுதிய ஃபர்ஸ் லவ் படித்தது நினைவுக்கு வந்தது. அதுதான் சிந்துசமவெளி கதை. இதை சொன்னேன் ஓகே சொல்லிட்டாங்க. அந்த படத்தில் நான் செய்த தவறு, கே.பி சார் மாதிரி பாலிஸா சொல்லாம சில இடங்களில் ஓவர் டோஸா போயிடுச்சு. ஆண்கள் செய்தால்  இந்த சமுதாயத்தில் ஒப்புக்கொள்கிறார்கள். ஒரு பெண் விரும்பி இன்னுடன் உறவு வைத்துக்கொள்கிறாள் என்றால் சமுதாயம் ஒப்புக்கொள்ளவில்லை. சமூக ஆரவலர்கள் இந்த படத்தை பார்க்க கூடாதுனு போராட்டம் பண்ணாங்க. என் குழந்தை பிறந்திருக்கு. அப்போ வீட்டில் கல்லை விட்டு எரிந்தாங்க. என் அம்மா அப்போ கேட்டாங்க ஏம்பா.. கஷ்டப்பட்டு வந்தே... இன்ஜினியரிங் படிச்சே , சினிமா ஆசைனு போன அங்கேயும் நிறைய பேர் வாங்கிட்ட... ஆனால் எல்லாம் கெட்டப்பெயராக இருக்கு. அதன் பிறகு கங்காருனு ஒரு அண்ணன் தங்கை கதையை எடுக்க திட்டமிட்டேன். ஆனால் அந்த படமும் அமையவில்லை." என்றார்.

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Embed widget