மேலும் அறிய

TVK Vijay: விஜய்க்கு விவாகரத்து ஆயிடுச்சா? - எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன தகவல்.. அடுத்த சர்ச்சை!

விஜய் இப்படிப்பட்டவர், அவர் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்துக்கும், அப்பா-அம்மாவுக்கும் எதிரானவர் என சொல்லி அவரின் கேரக்டரை சிதைத்து வருகிறார்கள் என எஸ்.ஏ.சந்திரசேகர் ஆதங்கப்பட்டுள்ளார்.

எப்பவோ முடிந்து போன விஜய் - சங்கீதா விஷயத்தை இப்போது எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து அரசியல் செய்வதாக இயக்குநரும், விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். 

அரசியலில் களம் கண்ட விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் தற்போது அரசியலிலும் களம் கண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் களம் கண்டுள்ளார். இதற்காக சினிமா வாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதனிடையே தேர்தல் தேதி கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு சில நாட்கள் முன்பு விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. 

எமனாக அமைந்த விவாகரத்து வழக்கு

இது தமிழக மக்களிடையேயும், விஜய் ரசிகர்களிடையேயும் பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து விஜயை தாறுமாறாக விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல் சங்கீதா தனது மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் விஜய்க்கு பின்னடைவாக அமையும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை வேறு, அரசியல் பயணம் வேறு என்ற ரீதியில் செயல்பட்டதால் இந்த விவகாரம் அதன்பின் பெரிதாக எடுபடவில்லை. விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் விஜயின் தந்தையாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், “அரசியலாகவோ, சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் அரசியலாக்கப்படுகிறதே, பேசப்படும் பொருளாக மாறுகிறது. ஒரு அப்பாவாக இதனை எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

எப்போதோ முடிந்து போன விஷயம்

அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், ஆங்கிலத்தில் character assassination என்ற ஒரு வார்த்தை உண்டு. அதாவது நம்முடைய கேரக்டரை படுகொலை செய்வது. கத்தி, இரத்தம் சிந்தி கொலை செய்யாமல் குணாதிசயங்களை கொல்வது என்பது அர்த்தமாகும்.

அப்படியாக விஜய் இப்படிப்பட்டவர், அவர் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்துக்கும், அப்பா-அம்மாவுக்கும் எதிரானவர் என சொல்லி அந்த கேரக்டரை சிதைத்து வருகிறார்கள். இது எதிராளிகளுக்கு கைவந்த கலை. அதுதான் தனிமனித தாக்குதலாக முன்னெடுக்கப்படுகிறது. எப்போது அவர்களுக்குள் சமரசமாகி கையெழுத்தான ஒரு விஷயத்தை இப்போது கொண்டு வர வைத்திருக்கிறார்கள். முடிந்த ஒரு விஷயம் வெளியே வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு  காரணம் இருக்க வேண்டும். இது எதிர்க்கட்சிகளின் திட்டம் தான். அதற்கு அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வாய்ப்பு கொடுத்தார்களா என தெரியவில்லை” என கூறியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன கருத்துகள் மூலம் விஜய், சங்கீதா இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிய வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் ஏன் இந்த விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என நெட்டிசன்கள் பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget