Leo:லியோ ரிலீசாகி ஒரு வாரம் நிறைவு.. வசூலே இல்லை என விமர்சனம்.. ரத்னகுமார் கொடுத்த பதிலடி..!
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வசூல் குறித்த விமர்சனத்துக்கு அப்படத்திற்கு வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வசூல் குறித்த விமர்சனத்துக்கு அப்படத்திற்கு வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் ஹீரோவாக “தளபதி” விஜய் நடித்துள்ளார். ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்தார்.
தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் லியோ வெளியான நிலையில் இப்படம் கலவையான விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியான நிலையில் தொடர் விடுமுறை வந்ததால் படத்தின் வசூலும் எகிறியது. ஏற்கனவே விஜய்க்கு குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாத ஆண், பெண் ரசிகர்கள் உள்ளனர். இதனால் திரையிட்ட இடமெல்லாம் திருவிழா என்பது போல அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது.
🤔 https://t.co/WhGiA5zNxS pic.twitter.com/QfNmtLNQer
— Rathna kumar (@MrRathna) October 25, 2023
இதனிடையே லியோ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.148.5 கோடி கிடைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் இதுவரை ஒருவாரம் ஆகி விட்ட நிலையில் அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக வசூல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சினிமா வட்டாரத்தில் வெளியான தகவல்படி., ’லியோ படம் ரூ.450 கோடி வசூலை ஈட்டியது’ என சொல்லப்பட்டது. படத்துக்கு அதிகளவில் அஜித் மற்றும் ரஜினி என சொல்லிக் கொள்ளும் சிலரால் நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்ததால் விஜய் ரசிகர்கள் டென்ஷனாகினர்.
மேலும் நேற்று (அக்டோபர் 25) முதல் விடுமுறை முடிந்து பணி நாட்கள் தொடங்கி விட்டதால் பகல் காட்சிகள் பெரும்பாலும் ரசிகர்கள் வருகை தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிக ஸ்கிரீன்கள் கொண்ட தியேட்டரில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனிடையே ட்விட்டரில் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், லியோ படத்தின் வசூல் சொல்லப்படாதது குறித்து இணையவாசி ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை குறிப்பிட்டு பதிலளித்த படத்திற்கு வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார், விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் காட்சியை பகிர்ந்து “குழந்தை அழுறது கேட்கிறதா?” என நக்கலாக பதிலளித்துள்ளார். இது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் sacnilk தளம் வெளியிட்ட தகவலின்படி, 7வது நாளான நேற்று (அக்டோபர் 25) ரூ.12.50 கோடி கலெக்ஷனை இந்தியாவில் லியோ படம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.