‛கேன்சர்னு சொன்னேன்.. 30 வது நிமிஷத்துல விஜய் வீட்டுக்கு வந்தார்’ -இயக்குனர் ரமணா உருக்கம்!
Director Ramana on Vijay: கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டேன் என்று சொன்ன உடன் அடுத்த 30 ஆவது நிமிடத்தில் விஜய் மனைவியுடன் வீட்டிற்கு வந்து விட்டதாக இயக்குநர் ரமணா பேசியிருக்கிறார்.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டேன் என்று சொன்ன உடன் அடுத்த 30 ஆவது நிமிடத்தில் விஜய் மனைவியுடன் வீட்டிற்கு வந்து விட்டதாக இயக்குநர் ரமணா பேசியிருக்கிறார்.
இயக்குநர் ரமணா விஜயின் ‘திருமலை’ ‘ஆதி’ தனுஷின் ‘சுள்ளான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த நிலையில் திடீரென கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது நடந்த சம்பவம் ஒன்றை தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.
அவர் பகிர்ந்த அனுபவ பதிவு
நான் விஜயிடம் எனது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை பற்றி கூறினேன். அப்போது கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் கூட அடுத்த 30 ஆவது நிமிடத்தில் விஜய் அவரது மனைவியுடன் என்னுடைய வீட்டிற்கு வந்து விட்டார். என்னிடம் லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவுவதாக சொன்னார். நான்தான் இங்கேயே தேவையான சிகிச்சைகள் கிடைப்பதாக கூறி, சிகிச்சைப்பெற்றேன். சென்னையில் எனக்கு ஆப்ரேஷன் நடந்து கொண்டிருந்த போது விஜய் ஆப்ரேஷன் தியேட்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
என்னை அக்கறையாக பார்த்துக்கொள்ளவும், எனது உடல்நிலை குறித்தான அப்டேடை தெரிந்து கொள்ளவும் அவரது டாக்டரின் நண்பரை நியமித்து இருந்தார். என்னை மருத்துவமனையில் இருமுறை வந்து பார்ப்பார். எனது சிகிச்சைக்கான பணத்தை விஜயும் அவரது அப்பாவும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது சில சொத்துக்களை விற்று என்னுடைய சிகிச்சைக்கான செலவை செய்தேன்.” என்று பேசியுள்ளார்.
விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கிவரும் ‘வாரிசு’ படத்தில் நடித்துவருகிறார். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர்களுடன் ஷியாம், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, சம்யுக்தா, சரத்குமார், குஷ்பூ, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு பெரிய திரைப்பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. "வாரிசு" படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் தமன்.
View this post on Instagram
‘மாஸ்டர்’ படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜூடன் இணைந்த விஜய், தனது அடுத்தப்படத்திலும் அவருடன் இணைகிறார். ‘தளபதி 67’ என்று அழைக்கப்படும் இந்தப்படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனையை நிகழ்த்திய நிலையில், இந்தப்படத்தை பார்த்த விஜய், லோகேஷ் கனகராஜை பாராட்டி “ மைண்ட் ப்ளோயிங்” என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.