பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்த ராஜமெளலி...வசமாக சிக்கிய மகேஷ் பாபு
ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் புதிய படத்தைப் பற்றி அப்டேட் வெளியிட்டுள்ளார் ராஜமெளலி

ராஜமெளலி
இந்திய சினிமா வரலாற்றில் இயக்குநர் ராஜமெளலி எந்த காலத்திலும் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவெடுத்துள்ளார். பாகுபலி 1 , 2 படங்களின் மூலம் அனைத்து திரைத்துறையினருக்கு வரலாற்று திரைப்படங்களை உருவாக்க பெரிய இன்ஸ்பிரேஷனாக ராஜமெளலி இருக்கிறார். இந்திய புராணக் கதைகளுக்கு உலகளவில் பெரிய மார்கெட் இருக்கிறது என்பதை இந்த படங்களின் வெற்றிகள் நிரூபித்து காட்டின. பாகுபலி ஒரு உச்சம் தொட்டால் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் மற்றொரு வரலாற்று சாதனை படைத்தது. இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் உலகளவில் வைரலாகி ஆஸ்கர் மேடை வரை ஒலித்தது. வசூல் ரீதியாக ராஜமெளலி படங்கள் தொட முடியாத உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளன. ஒட்டுமொத்த திரையுலகமே ராஜமெளலியின் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மகேஷ் பாபு ராஜமெளலி கூட்டணி
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராஜமெளலி மகேஷ் பாபுவின் 29 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மாபெரும் சாகசக்கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அமேசான் காடுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாகவும் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2029 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான தகவல்கள் உறுதியாகியுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் இபப்டத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜமெளி வெளியிட்ட வீடியோ
இப்படம் பற்றி ராஜமெளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சிங்கம் ஒன்று கூண்டில் இருக்கும் புகைப்படத்தை ராஜமெளலி பார்த்தபடி நிற்கிறார். பின் தனது கையில் பாஸ்போர்ட் ஒன்றை அவர் காட்டுகிறார். மகேஷ் பாபுவை சமீப காலங்களில் ரசிகர்கள் லயன் என்று அழைத்து வருகிறார்கள். தனது படத்திற்கு மகேஷ் பாபுவின் கால் ஷீட் ஓக்கே செய்துள்ளதை தான் ராஜமெள்லி இப்படி சிம்பாலிக்காக சொல்கிறார். இந்த வீடியோவில் மகேஷ் பாபு தான் நடித்த போக்கிரி பட வசனமான ' ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானேன் கேட்கமாட்டேன்" என்று கமெண்ட் செய்துள்ளார். பிரியங்கா சோப்ராவும் இந்த வீடியோவில் கமெண்ட் செய்துள்ளார்
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

