மேலும் அறிய

Vikram Movie : "விக்ரம்" பார்க்க வரும் முன் "கைதி"யை கண்டிப்பா பாத்துட்டு வாங்க...! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்..!

விக்ரம் படத்தில் பார்க்க வரும் முன் தான் இயக்கிய கைதி படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வருமாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசஜ் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் நாளை வெளியாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் ஆக்‌ஷன் படம் வெளியாவதால் கோலிவுட் திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில், விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“ இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதில் இருந்தே உலகநாயகன் ரசிகனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன். இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது.

Vikram Movie :

இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். விக்ரம் பட வேலைகளைத் தொடங்கி பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. ரத்தமும், வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை “உலகநாயகன்” கமல்ஹாசனை கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்.

வாய்ப்புக்கு நன்றி சார். இந்த திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்.

என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணி நேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்க முடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். “கைதி”யை இன்னொரு முறை மறுபார்வை பார்த்துவிட்டு “விக்ரம்” அழைத்துச்செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vikram Movie :

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அடிப்படையாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. அவரது இரண்டாவது படமான கார்த்தி நடித்த கைதி திரைப்படமும் போதைப்பொருட்களை அடிப்படையாக கொண்ட கதைக்களம் ஆகும். இந்த நிலையில், கைதி படத்தை ஒரு முறை மீண்டும் பார்க்கச் சொல்லி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதால், கைதி படத்திற்கும், விக்ரம் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், கைதியையும் மீண்டும் ரசிகர்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்க்கச் சொல்லியிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு ஆளாகியுள்ளனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget