ரொமான்ஸ் படத்தை தான் இயக்கவிருந்தேன்.. நதிகளிலே நீராடும் சூரியனின் கதையை வெளியிட்ட கெளதம் மேனன்
படத்திற்காக நாங்கள் அதிகம் மெனக்கெடவில்லை.. இப்போது வரும் விமர்சனங்கள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. மனம் விட்டு பேசிய கெளதம் மேனன்
சிம்புவின் நடிப்பில் வெளியான “வெந்து தணிந்தது காடு” படம், மக்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் களைக்கட்டி வருகிறது. பொருளாதார ரீதியாகவும் இப்படமானது ரிலீஸான முதல் வாரத்திலேயே நல்ல வசூலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
முதலில் இப்படத்திற்கு, நதிகளிலே நீராடும் சூரியன் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், படத்தின் கதையை மாற்றி அமைத்து, அதற்கு வெந்து தணிந்தது காடு என்ற தலைப்பை கொடுத்தனர். நேர்காணல் ஒன்றில், கெளதம் மேனன் நதிகளிலே நீராடும் சூரியன் கதை பற்றி முதன்முதலாக பேசியுள்ளார். முதலில் நான், ஒரு காதல் கதையைதான் எழுதியிருந்தேன். இந்த கதைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருந்தார். மூன்று பாடல்களும் இசையமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த போது, ஒரு கேங்ஸ்டர் கதையை எனக்கு கூறினார். அப்போது “ துப்பாக்கியை யார் ஏந்துவது என்று துப்பாக்கிதான் முடிவு செய்யும், துப்பாக்கி ஏந்துபவன் முடிவு செய்யக்கூடாது.” என்ற வரியை சொன்னபோது இப்படிப்பட்ட
கதையைதான் இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
View this post on Instagram
“எழுத்தாளர் ஜெயமோகன், இப்படத்தில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், நடிகர் சிம்பு, இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் புதுவிதமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று கூறியிருந்தேன். சிம்புவிடம் இரண்டு மணி நேரமாக கதையை விளக்கினேன். அடுத்த முறை சந்தித்த போது, படத்திற்கான லுக் டெஸ்டிங்கில் ஈடுபட்டிருந்தோம். மூன்றாம் சந்திப்பில் படப்பிடிப்பை துவங்கிவிட்டோம்.” என்று கெளதம் மேனன் பேசினார்.
View this post on Instagram
சிம்பு உடல் எடையை குறைத்து கொள்ள துவங்கினார். படத்திற்கு ஏற்றவாரு பதின் பருவ இளைஞனுக்கு தேவையான தோற்றத்தை அடைய வேண்டும் என கேட்ட போது, மூன்றே மாதத்தில் முழு உருவத்தையே மாற்றி காட்டினார். படத்திற்காக அதிகமாக நாங்கள் எங்களை அலட்டி கொள்ளவில்லை. திட்டமிட்ட படியே அனைத்தும் சுமகமாக முடிவு பெற்றது. ரீ ஷூட், அதிக வேலை என எதுவும் இல்லை. படமும் வெளியாகிவிட்டது, இப்போது வரும் விமர்சனங்களை கேட்டு நான் சந்தோஷமாக உள்ளேன் என்றும் இயக்குநர் கெளதம் கூறினார்.