“விஜய் டேட் கொடுத்தாரு.. நானே வேணாம்னு சொல்ற நிலைமை; தப்பு பண்ணிட்டேன்” - இயக்குநர் சேரன் வேதனை!
”2 மணி நேரம் 3 மணி நேரம் எவ்வளவு நேரம் ஆனாலும் , ஒரு இம்மி கூட நகரமாட்டாரு , அசைய மாட்டாரு.”
மண் மணம் மாறாமல் சினிமா எடுக்கும் வெகு சில இயக்குநர்களுள் சேரன் தவிர்க்க முடியாதவர். பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து , ஆட்டோகிராஃப் என இவர் இயக்கிய அனைத்து படங்களுமே ஏதாவது ஒரு தாக்கத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்த தவறியதில்லை. சேரன் தான் கடந்து வந்த சினிமா குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த பொழுது , நடிகர் விஜய்யுடன் ஒப்பந்தமான படம் குறித்தும் , அது ஏன் கைக்கூடாமல் போனது என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில்” விஜய் சார் என்கிட்ட கதை கேட்டாரு. அவருடைய படத்தை மிஸ் பண்ணது என் வாழ்க்கையில நான் பண்ண சில தவறுகளில் முக்கியமான ஒன்று. கதை ஓகே பண்ணிட்டாரு, கண்ஃபார்ம் பண்ணிட்டாரு , தேதியும் கொடுத்துட்டாரு. விஜய் ரொம்ப சின்ஸியர் அண்ட் டெடிக்கேட்டிவான நடிகர். கதை கேட்கும் பொழுது எந்த டைவர்ஸனும் இல்லாம, ஆர்வமா கேட்பாரு. 2 மணி நேரம் 3 மணி நேரம் எவ்வளவு நேரம் ஆனாலும் , ஒரு இம்மி கூட நகரமாட்டாரு , அசைய மாட்டாரு. நான் சிவாஜி சாருக்கு பிறகு விஜய் சாரத்தான் அப்படி பார்த்திருக்கிறேன். நான் சிவாஜி சாருக்கு கதை சொல்லியிருக்கேன். தேசிய கீதம் படத்துல விஜயகுமார் சார் பண்ண கதாபாத்திரம் சிவாஜி சார் பண்ண வேண்டியது. அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால பண்ண முடியாம போயிடுச்சு. விஜய் சாருக்கு கதை சொன்ன சமயத்துல நான் தவமாய் தவமிருந்து படம் பண்ணிட்டு இருந்தேன். நான் ஒரு படம் முடிக்காம இன்னொரு படத்தை பண்ணமாட்டேன். அப்படி ஒரு வியாதி எனக்கு. அந்த சமயத்துல தவமாய் தவமிருந்து படம் முடிய நிறைய நேரமாயிடுச்சு. அதுக்குள்ள விஜய் சார் தேதி வந்துருச்சு. நான் அவர்க்கிட்ட இந்த படம் முடிக்காம உங்களுடையதை ஆரமிக்க முடியாதுனு சொல்லிட்டேன். அதுதான் நான் பண்ண தப்பு. அந்த படம் மட்டும் பண்ணியிருந்தா, இன்னைக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கும்“ என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் சேரன்.