மேலும் அறிய

Pa. Ranjith: பா.ரஞ்சித் எதிர்கால தலைமுறையினருக்கான வழித்தடம்... பாலாஜி சக்திவேல் புகழாரம்!

Pa. Ranjith : 'பிகே ரோசி திரைப்பட விழா'வில் பா. ரஞ்சித் பற்றி நெகிழ்ந்து பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசியுள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தும் 'பிகே ரோஸி திரைப்பட விழா' ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 4ம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் மற்றும் நடிகர் பாலாஜி சக்திவேல் சிறப்புரை ஆற்றினார். 

 

Pa. Ranjith: பா.ரஞ்சித் எதிர்கால தலைமுறையினருக்கான வழித்தடம்... பாலாஜி சக்திவேல் புகழாரம்!

பாலாஜி சக்திவேல் பேசுகையில் பா. ரஞ்சித் இந்த திரைத்துறையில் நுழைவதற்கு முன்னர் இருந்த சினிமாவிற்கும் அவர் வந்ததற்கு பிறகு இருக்கும் சினிமாவுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. அவர் எடுக்க கூடிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய அதிர்வலைகள்,  தாக்கம், கலாபூர்வமான அழுத்தமான படைப்புகளாக தான் அமைந்துள்ளன. அவரின் இந்த வருகை இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள தான் வேண்டும். 

மனிதர்களின் அழகியல், உணர்வை அவர் மட்டுமே இயக்குவதோடு நின்றுவிடாமல் ஒரு தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள் முதல் ஜே பேபி வரை பல அருமையான படைப்புக்களை அறிமுக இயக்குநர்கள் மூலம் வெளிகொண்டு வந்துள்ளார். தன்னுடைய கலை சேவையை அத்துடன் நிறுத்தி கொள்ளாமல் அதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சி அவரின் நேர்மையை சுட்டிக்காட்டுகிறது. 

 

Pa. Ranjith: பா.ரஞ்சித் எதிர்கால தலைமுறையினருக்கான வழித்தடம்... பாலாஜி சக்திவேல் புகழாரம்!

படங்களை இயக்குவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதுடன், நூலகம், வானம் நிகழ்ச்சி மூலம் வரும் தலைமுறையினருக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுப்பது மூலம்  கலைக்கு சேவை செய்து வருகிறார். அவரின் இந்த செயல்பாடு மிகப்பெரிய மாற்றத்திற்கான வழித்தடமாக அமைந்து வருகிறது. இதற்காக அவர் பல சிக்கல்களையும் சந்தித்து வருகிறார். இது போன்ற ஒரு திரைப்பட விழா நடத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. 

அதே நேரத்தில் திரைப்படங்களையும் ஒரு பக்கம் எடுத்து வரும் பா. ரஞ்சித் அதன் மூலம் வரும் வருமானத்தை இது போன்ற திரைப்பட விழாவிற்கு எந்த ஒரு லாபத்தையும் பார்க்காமல் செலவு செய்து வருகிறார். இதன் மூலம் வரும் தலைமுறையினருக்கு, கலைத்துறையில் முன்னேற்றத்திற்கு முதலீடு செய்து வருகிறார். பா. ரஞ்சித் படங்கள் மட்டுமின்றி அவரின் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் கூட இந்த சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பா. ரஞ்சித் மிகவும் கோபக்காரர். அவரின் கோபத்திற்கு பின்னால் ஒரு அர்த்தம் உள்ளது, வலி உள்ளது. அதை கதாபாத்திரங்கள் மூலம் பேச வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை அவ்வளவு எளிதில் யாராலும் துணிச்சலாக செய்து விட முடியாது என பேசி இருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். 

தலைப்பு செய்திகள்

"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
CBSE: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு 2026: கால அட்டவணை வெளியீடு! பதிவிறக்க வழிமுறைகள்!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
திவால் ஆன சிஎம்டிஏ; ஊதியத்திற்கே பணமில்லையா? வெள்ளை அறிக்கை கேட்கும் அன்புமணி!
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
Embed widget