மேலும் அறிய

AR Murugadoss: சல்மான்கானுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்.. அப்ப சிவகார்த்திகேயன் படம்?

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் 4 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ருக்மணி வசந்தும் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் பிரபலம் சல்மான் கானுடன் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முருகதாஸ்

கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் உறுதி செய்தது. சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியதில் தீனா படத்துக்கு முக்கிய பங்குண்டு. இதனைத் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து “ரமணா” படத்தை இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

பின்னர் சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு, விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கினார். மேலும் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தர்பார் என்ற படம் எடுத்தார். தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை இயக்கினார். அதேபோல் ஸ்டாலின் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். 

இந்தியில் கிடைத்த வெற்றி 

2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து தான் இயக்கிய கஜினி படத்தை 2008 ஆம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்தார் முருகதாஸ். இந்த படத்தில் ஹீரோவாக ஆமீர்கானும், ஹீரோயினாக அசினும் நடித்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் இந்தியில் வெற்றி பெற்றது. ஒரே படத்தால் ஓவர் நைட்டில் பாலிவுட்டில் கொடி நாட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இந்தியில் அக்‌ஷய்குமாரை வைத்து ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்ய இதுவும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் செல்லாத ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மீண்டும் சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். இந்த புதிய படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் அல்லது பக்ரீத் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன் படம் நிலை?

இதனிடையே தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் 4 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனும், ஹீரோயினாக ருக்மணி வசந்தும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 3 வாரங்களுக்கு முன் தான் தொடங்கியது. இப்போது சல்மான் கானை இயக்கப்போவதாக முருகதாஸ் அறிவித்திருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி சிவகார்த்திகேயன் படம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தலைப்பு செய்திகள்

JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget