மேலும் அறிய

Director Ameer: சொந்த காசில் சூனியம்.. யோகி படத்தை தயாரித்ததால் அமீருக்கு இவ்வளவு கோடி நஷ்டமா?

நடிகனாக யோகி படம் தனக்கு திருப்தி தரவில்லை என்றும், அதனால் எனக்கு நஷ்டம் தான் ஏற்பட்டதாகவும் இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 

நடிகனாக யோகி படம் தனக்கு திருப்தி தரவில்லை என்றும், அதனால் எனக்கு நஷ்டம் தான் ஏற்பட்டதாகவும் இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் உள்ளிட்ட படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக மாறியவர் அமீர். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுப்பிரமணியம் சிவா இயக்கிய இப்படத்தில் மதுமிதா, சுவாதி, வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தென்னாப்பிரிக்கா அகாடமி விருது பெற்ற 2005 ஆம் ஆண்டு வெளியான  Tsotsi திரைப்படத்தின்  ரீமேக் ஆகும். ஆனால் இந்த படம் தோல்வியடைந்தது.

இந்த படம் வெளியாகி நேற்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பருத்திவீரன் பிரச்சினையில் இருக்கும் அமீர், யோகி படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியுள்ளார். 

அதில், “ஒரு நடிகனாக யோகி படம் திருப்தி தரவில்லை. ஒரு இயக்குநராக இருந்து நடிகராக போகும் நிறைய சிரமங்கள் இருந்தது. சுப்பிரமணிய சிவா இயக்குநராக இருந்து நான் கேமரா முன்பு நின்று கொண்டிருந்தபோது கூட இயக்குநர் என்ற மனநிலையே இருந்தது. என்னை நடிகனாக பார்ப்பதில் ஒரு நம்பிக்கை வரல. யோகி கேரக்டர் குடிசைப் பகுதியில் உள்ள கதாபாத்திரம் என்பதால் தப்பித்து விட்டது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் ஃபைட் மட்டும் ஒரு மாசம் எடுத்தோம். என்னுடைய சொந்த படம் அது. தண்ணி போல செலவு பண்ணேன். கிளைமேக்ஸ் பார்த்ததும் அது செட்டாகவில்லை என தெரிஞ்சது . நான் அவரிடம், ‘படம் ஒரு கட்டம் வரை சரியாக சென்றது. ஆனால் அதன்பிறகு வேறு பாதையில் சென்று விட்டது’ என கூறினேன். ஆனால் சுப்பிரமணிய சிவா தனக்கு திருப்தி தருவதாக சொன்னார். அவருக்காக தான் படம் நடித்தேன் என்பதால் நான் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. 

அதற்கு முன்னாடி மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பிக் பி படத்தை ரீமேக் செய்யலாம் என நினைத்தோம். அப்புறம் அதை விடுத்து நான், சுப்பிரமணியம் சிவா, சமுத்திரகனி எல்லோரும் சேர்ந்து ஒரு கதை எழுதி முடிச்சிட்டோம். ஷூட்டிங் போகலாம் என நினைக்கும்போது சிவா திடீர்னு வந்து தென்னாப்பிரிக்க படம் ஒன்றை கொடுத்து இதை பண்ணலாம் என சொன்னார். நாங்கள் அதிகாரப்பூர்வமாக ரீமேக் ரைட்ஸ் வாங்க சம்பந்தப்பட்ட படக்குழுவினரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை. அதனால் சில காட்சிகளை மாற்றி அந்த படத்தை எடுத்தோம். ஒரு நடிகனாக யோகி என்னை வெளியே கொண்டு வந்தாலும், தயாரிப்பாளராக அப்படத்தால் எனக்கு கிட்டதட்ட ரூ.2.80 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதுபற்றி ஒருநாள் கூட நான் பேசிக் கொண்டே கிடையாது. அந்த கடனை அடைப்பதற்கான கமிட் ஆனது தான் ஆதிபகவன் படம்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget