மேலும் அறிய

இளையராஜா - பாக்யராஜ் மோதலுக்கு காரணம் என்ன? ஸ்டூடியோவில் நடந்த பிரச்சினை இதுதான்!

திரைக்கதை மன்னன் பாக்யராஜிற்கும், இசைஞானி இளையராஜாவிற்கும் ஏற்பட்ட மோதலுக்கு காரணம் என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் பாக்யராஜ். இவரது ஆரம்ப கால படங்களில் இளையராஜா இசையமைத்து வந்தார். பின்னர், பாக்யராஜின் திரைப்படங்களுக்கு அவர் பெரியதாக இசையமைக்கவில்லை. 

இளையராஜா - பாக்யராஜிற்கு என்ன பிரச்சினை?

இருவருக்கும் என்ன பிரச்சினை? என்பது குறித்து பாக்யராஜ் ஒரு முறை பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

இளையராஜா சின்னவீடு படம் வரைக்கும் பண்ணிக்கொண்டு இருந்தார். என்னுடைய நிறைய படங்களுக்கு பண்ணிக்கொண்டு வந்தார். ஒவ்வொரு படத்தின்போதும் அடுத்து எப்போ? என்று முன்கூட்டியே சொல்லுங்கள் என்பார். 

நான் ஸ்கிரிப்ட் ரெடியாகவும் முன்னாடியே சொல்லிவிடுவேன். அடுத்த ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது என்பதால் ஸ்டூடியோவிற்கு போகும்போது அவர் உடன் இருக்கும் உதவியாளரிடம், சாரிடம் நான் ரெடி என்று சொல்லுங்கள். எப்போ வேண்டுமானாலும் ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என்றேன்.

முடியாது என்ற பாக்யராஜ்:

அவர் சாரை வீட்டிற்குச் சென்று பார்த்துவிடுங்கள் என்றார். நான் இது என்ன புதுசா இருக்குது? வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்கிறீர்கள்? எதுக்கு? என்று கேட்டேன். இல்லை, இல்ல. வீட்டில் சென்று பாருங்கள். எல்லாரும் அப்படித்தான் பார்க்கிறார்கள். 

என்னங்க இது? ஸ்டூடியோவில்தான் எப்போதும் இருப்பார். அதனால் இங்கேதான் பார்க்கிறேன்.  வீட்டில் தனியாக போய் பார்க்கிறது என்ன? எனக்கு புரியவில்லையே என்றேன். இல்லை, இல்லை எல்லாரும் வந்து பார்க்கிறார்கள் என்றார். வந்துட்டு போனேனு சொல்லுங்க. தேவைப்பட்டா வந்து பாக்குறேன். இதுக்கு முன்னால வேலை பார்க்கலனா கூட பரவாயில்ல. நான் ரெகுலரா வேலை பார்த்துட்டு இருக்கேன். நீங்க சொல்றது புதுசா இருக்குது?

இவ்வாறு அவர் கூறினார். 

மீண்டும் இணைந்த கூட்டணி:

இந்த படத்திற்கு பிறகு பாக்யராஜ் தனது சில படங்களுக்குத் தானே இசையமைத்தார். சின்ன வீடு படத்திற்கு அடுத்து பாக்யராஜ் இயக்கிய எங்க சின்ன ராசாவே படத்திற்கு சங்கர் கணேஷு் இசையமைத்தார். அவர் எழுதிய இது நம்ம ஆளு படத்திற்கு அவரே இசையமைத்தார். அவரது ஆராரோ ஆரிராரோ படத்திற்கு இசையமைத்தார். 

பின்னர், இந்த கூட்டணி மீண்டும் ராசுக்குட்டி படத்தில் இணைந்தது. வீட்ல விசேஷங்க, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். சமீபத்தில் பாக்யராஜிற்கு நடந்த திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக நடந்த பாராட்டு விழாவில், இளையராஜா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
சாய் அப்யங்கரை சாடிய சந்தோஷ் நாராயணன் பதிவுக்கு ‘ஹாஹா’ கமெண்ட்...ஷான் ரோல்டன் விளக்கம்
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஆத்திரத்தின் உச்சியில் ரேவதி.. மனம் மாறுவாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget