மேலும் அறிய

Jailer : டைனோசர்களின் காதலர்கள்... ஜெயிலர் மற்றும் சலார் படத்தில் இருக்கும் ஒற்றுமையை பாருங்க..!

புலி, சிங்கம், சிறுத்தை எல்லாம் வழக்கொழிந்து விட்டன நடிகர்களின் மாஸ் காட்ட இயக்குநர்கள் புதிதாக பயன்படுத்தும் மிருகம் டைனோசர்கள்

இயக்குநர்களுக்கு எல்லாம் புதிதாக டைனோசர்களின் மேல் என்ன ஆர்வம்  வந்ததோ தெரியவில்லை. சிங்கம், புலிகளை வைத்து பில்டப் கொடுப்பதை விட்டு இப்போதெல்லாம் ஹீரோக்களை டைனோசர்களுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். சமீபத்தில் வந்த ஜெயிலர் மற்றும் இனி வரவிருக்கும் சலார் படத்துக்கும் இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா?

சலார்

கேஜிஎஃப் முதல் மற்றும் 2 ஆம் பாகம் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பிரபாஸ்,  ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சலார் படத்தை ஹம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார்.  இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் வெளியான குறுகிய காலத்திற்குள்ளாகவே 100 மில்லியன் பார்வையாளர்களை தொட்டது இந்த டீசர். இந்த டீசரில் பிரபாஸைப் பற்றிய பில்டப் கொடுத்தார் நடிகர் தின்னு ஆனந்த். அப்போது அவர் சிங்கம், புலி, சிறுத்தை இதெல்லாம் பெரிய மிருகங்கள்தான். ஆனால் ஜூராசிக் பார்க்கில் இவையெல்லாம் சின்ன மிருகங்கள் என்று பிரபாஸை டைனோசர்களுடன் ஒப்பிட்டிருப்பார்.

 ஜெயிலர்

அதேபோல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர் படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சலார் படத்தைப் மாதிரியே இந்தப் படத்திலும் வில்லன் கூட்டத்தில் வரும் கதாபாத்திரம் ரஜினியை டைனோசர்களுடன் ஒப்பிட்டு பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதே போல்  படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியை குட்டி டைனோசர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு படங்களில் இருக்கும் ஒற்றுமையைப் பார்த்து தென் இந்திய இயக்குநர்களுக்கு புதிதாக டைனோசர்களின் மீது ஏற்பட்டிருக்கும் மோகம் தெரிகிறது.

மாபெரும் வெற்றிபெற்ற ஜெயிலர்

தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், படம் வெளியான நாள் முதல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் ஜெயிலர் படம் ஒரு வாரத்தில் ரூ.375.40 அதிகமான கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும், இது மாறலாம் எனவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget