“பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நான் நினைத்தது இவரைத்தான்” - மனம் திறக்கும் இயக்குநர்
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம், நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ரொமாண்டிக் காதல் திரைப்படம் ஆகும்
2015ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம், நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ரொமாண்டிக் காதல் திரைப்படம் ஆகும். பிரேமம் மலையாளத்தில் படு ஹிட் மற்றும் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. படத்தில் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட கதாபாத்திரம் மலர் டீச்சர். சாய் பல்லவி மலராக நடித்திருந்தார். அவரது அறிமுகத் திரைப்படம் என்றாலும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் அவருக்காக உருவாக்கியது. ஆனால் மலரின் பாத்திரத்திற்கு அவர் முதல் தேர்வு அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
View this post on Instagram
சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய இயக்குனர் அல்போன்ஸ், "தொடக்கத்தில் நான் வசனம் எழுதியபோது அது மலையாளத்தில் அமைந்திருந்தது. மலரின் மலையாளப் பதிப்பில் அசின் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்தக் கதாபாத்திரம் ஃபோர்ட் கொச்சியைச் சேர்ந்தது. ஆனால் என்னால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அசினை தொடர்பு கொள்ள நிவினும் முயற்சித்தார். பின் அந்த யோசனையை கைவிட்டு தமிழில் வசனம் எழுதினேன்.அந்த ஸ்கிரிப்ட் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோதே மாற்றப்பட்டது. சிறு வயதில் ஊட்டியில் படித்துவிட்டு சென்னையில் சினிமா படிப்பை படித்தேன். அதனால் தான் வலுவான தமிழ் பாதிப்பு." எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மலராக அசின் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram