Dhanush: டோலிவுட் என்ட்ரி... ஜோடி சேரும் ‘ஸ்ரீவள்ளி’ ராஷ்மிகா...முக்கிய ரோலில் உச்ச நடிகர்... தனுஷின் அடுத்த பட அப்டேட்!
கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![Dhanush: டோலிவுட் என்ட்ரி... ஜோடி சேரும் ‘ஸ்ரீவள்ளி’ ராஷ்மிகா...முக்கிய ரோலில் உச்ச நடிகர்... தனுஷின் அடுத்த பட அப்டேட்! Dhanush next movie Update Rashmika Mandanna Nagarjuna Akkineni Joined Cast for Dhanush Sekhar Kammula film Dhanush: டோலிவுட் என்ட்ரி... ஜோடி சேரும் ‘ஸ்ரீவள்ளி’ ராஷ்மிகா...முக்கிய ரோலில் உச்ச நடிகர்... தனுஷின் அடுத்த பட அப்டேட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/26/e2c09be6525823c4a9f17cfa1d4881fc1690364538482572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறது.
தனுஷ்
கோலிவுட்டின் மிக பிஸியான ஒரு நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாம பாலிவுட், ஹாலிவுட் என அவ்வப்போது தனது சில படங்களில் என்ட்ரி கொடுத்தும் வருகிறார் தனுஷ். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதே நேரத்தில் பாலிவுட் இயக்குநர் ஆனந்த்.எல். ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ என்கிற படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ். மற்றொரு புறம் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார்
டோலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தப் படம் மூன்று மொழிகளில் வெளியிடப்பட இருப்பதாகவும் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்குள் ஹீரோவாக தனுஷ் களமிறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாக இருக்கிறது.
கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பதே இந்தத் தகவல். ஏற்கெனவே வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது முதல் முறையாக தனுஷுடன் இணைகிறாராம். மேலும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
கேப்டன் மில்லர் டீசர்
ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேவரன் தற்போது இயக்கி வரும் படம் கேப்டன் மில்லர். தனுஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் ஒரு வரலாற்றுக் கதையாக உருவாகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் ஜூலை 28 ஆம்தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. கேப்டன் மில்லர் படத்தின் டீசருக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்து வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)