மேலும் அறிய

Captain Miller First Look: கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு... உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி

வாத்தி படத்தில் நடித்ததை அடுத்து, சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷூம் இந்த அறிவிப்பு குறித்து ட்வீட் செய்திருந்தார். 

ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூன்.30ஆம் தேதி கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள்களாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது தனுஷ் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கேப்டன் மில்லர் படத்தில் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன்,  நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தனுஷின் அடுத்த படம்

நடிகர் தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு,  மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான கால்ஷீட்டை ஏற்கெனவே தனுஷ் கொடுத்துவிட்ட நிலையில், மற்றொருபுறம் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D50 படத்தினை தனுஷ் தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: Udhayanidhi Stalin: 'நமக்கு நடிக்கவே வராது. அதுக்கே பெரிய பாடா இருக்கும்; இதுல இது வேறயா?’ - உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget