
(Source: ECI/ABP News/ABP Majha)
Desingh Periyasamy: சூப்பர் ஸ்டாருடன் அடுத்த படமா? உண்மையை உடைத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி!
தேசிங் பெரியசாமியின் அடுத்த படம் சூப்பர் ஸ்டார் உடன் தான் என்று பேசி வந்தனர். தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வந்த இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர் தேசிங் பெரியசாமி.

தமிழ் திரையுலகின் இளம் இயக்குநர், தேசிங் பெரியசாமி. இவர் தன்னுடைய முதல் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் வசீகரித்துவிட்டார். இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரித்து வர்மா, ரக்க்ஷன், நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தன் முதல் படத்திலேயே மிகவும் பரிச்சயமான இயக்குநர் போல் ஆகி விட்டார் தேசிங் பெரியசாமி. இந்த திரைப்படம் கொரோனாவிற்கு முன்னதாக வெளிவந்தது. பெரும்பாலான மக்கள் கொரோனா லாக்டவுன் காலத்தில் கடைசியாக திரையரங்குகளில் பார்த்த படமாக இந்த படத்தை தான் நினைவுகூறினர். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் சிறந்த திரைப்படமாக விளங்கியது.
உண்மையை உடைத்த தேசிங் பெரியசாமி!
நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குநர் தேசிங் பெரியசாமியை பாராட்டினார். மேலும், தேசிங்பெரியசாமி இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க தனக்கு ஆசை எனவும் கூறியிருந்தார். இதனை அடுத்து சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தேசிங் பெரியசாமியின் அடுத்த படம் சூப்பர் ஸ்டார் உடன் தான் என்று பேசி வந்தனர். தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வந்த இந்த இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. தேசிங் பெரியசாமி சமீபத்தில் ஊடகத்தினருக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் அவர் சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகர் எனவும்; அவரை வைத்து படம் பண்ண ஆசை என்றும் தெரிவித்துள்ளார். தேசிங்கு பெரியசாமியின் அடுத்த திரைப்பட அறிவிப்பை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தேசிங் பெரியசாமி திருமணம்:
இயக்குநர் தேசிங் பெரியசாமியின் காதலியும் மனைவியுமான நிரஞ்சனி அகத்தியன் அவரது முதல் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருப்பார். ஸ்ரேயா என்கிற நிரஞ்சனியின் கதாபாத்திரம் மிகவும் முக்கிய கதாப்பாத்திரமாக அமைந்திருக்கும்.இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்தது. நிரஞ்சனி அகத்தியன் தமிழ் திரைப்பட இயக்குநர் அகத்தியன் அவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குநர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள்; முதல் மகள் குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இரண்டாம் மகள் சென்னை 28 ஹீரோயின் விஜயலக்ஷ்மி, மூன்றாவது மகள் நிரஞ்சனி. அவரது மூன்று மகள்களும் தமிழ் திரைப்பட இயக்குநர்களை கரம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

