Demonte Colony 2: இருள் ஆளப்போகிறது... ‘டிமாண்டி காலனி 2’ யார்..? யார்.? என்ன கதாபாத்திரங்கள்...?
முதல் பாகத்திலேயே நடித்த அருள்நிதியுடன் இந்த பாகத்தில் புதிதாக ப்ரியா பவானி சங்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
டிமான்டி 2 காலனி:
டிமான்டி காலனி 2 படக்குழுவை அறிமுகப்படுத்தும் திகில் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் அஜய் ஞானமுத்து .
இவரது அறிமுக இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் டிமாண்டி காலனி. இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதனைத்தொடர்ந்து அஜய் ‘இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்தப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, டிமாண்டி காலனி படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் அஜய் தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் கதை , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை அஜய் ஞானமுத்து கவனிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கோப்ரா தோல்வி:
இந்த நிலையில்தான் அஜய் ஞான முத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ‘கோப்ரா’ படம் வெளியானது. ஆனால் இந்தப்படம் எதிர்பாராத வெற்றியை பெறாமல், படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் துவண்டு போன, அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி படத்தின் இராண்டாம் பாகத்தை தானே இயக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், முதல் பாகத்திலேயே நடித்த அருள்நிதியுடன் இந்த பாகத்தில் புதிதாக ப்ரியா பவானி சங்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இன்று இப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
View this post on Instagram
’இருள் ஆளப்போகிறது’ எனும் பெயரில் வெளியாகி உள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.