Coolie Aamir Khan: மிரட்டாலா இருக்கே! அமீர்கான் பெயர் இது தானா. கூலி படத்தின் புதிய அப்டேட்..
Coolie Update: கூலி படத்தின் புதிய அப்டேட்டாக அமீர் கானின் கதாப்பாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலிப்படத்தில் அமீர்கானின் கதாப்பாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கூலி:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் கூலி. இந்த படத்தில் நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஸ்ருதி ஹாசன் என படத்தில் ஐந்து மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
அமீர்கானின் பெயர்;
இந்த படத்தில் அமீர் கான் நடிப்பதாக முதலில் தகவல்கள் பரவி வந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அமீர்கான் ஒரு நேர்காணலில் கூலி படத்தில் கேமியோ செய்து தெரிவித்தார். சஸ்பென்ஸாக வைத்திருந்தது கசிந்த நிலையில் தற்போது அமீர்கானின் கதாப்பாத்திரத்தின் பெயர் தாஹா என படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Introducing #AamirKhan as Dahaa, from the world of #Coolie 😎⚡#Coolie is all set to dominate IMAX screens worldwide from August 14th 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbariv @girishganges… pic.twitter.com/Z8pI5YJzRe
— Sun Pictures (@sunpictures) July 3, 2025
சிகிட்டு பாடல்
கூலி படத்தின் முதல் பாடலான சிகிட்டு பாடல் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையில் டி ராஜேந்திரன் இந்த பாடலை பாடியிருந்தார்.
#GetChikitufied on your favourite streaming platforms! 📣
— Sun Pictures (@sunpictures) June 25, 2025
The first single #Chikitu is streaming now in Tamil, Telugu and Hindi! 💥🎶
🎵 https://t.co/MELbeDUgqm
▶️ https://t.co/eeQaA8RWor#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial… pic.twitter.com/dxdQxr8w5y
400 கோடி பட்ஜெட்:
கூலி திரைப்படம் சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரஜினிகாந்த் 280 கோடியும் படத்தின் இயக்குநர் லோகேஷ் 60 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெளிநாட்டு வெளியிட்டு உரிமம் ரூ 75 கோடிக்கும் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ 120 கோடிக்கு வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14 தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது.





















