Watch Video : நயகரா நீர்விழ்ச்சியில் குதித்து விளையாடும் சின்னத்திரை க்யூட்டி.. வைரலாகும் சிவாங்கி வீடியோ!
தற்போது அமெரிக்கா சென்றுள்ள சிவாங்கி நயகரா நீர்விழ்ச்சி அருகே குதித்தி விளையாடி கொண்டு இருக்கிறார்
பிரபல பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி கிருஷ்ணகுமார் சூப்பர் சிங்கர் 7 வது சீசனில் கலந்து கொண்டு அழகாய் பாடினாலும், சிவாங்கிக்கு எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் குக் வித் கோமாளி எனும் ரியாலிட்டி ஷோ மூலமாக புகழின் உச்சத்தை அடைந்தார். பிரபலமான பிறகு இவர் பல ஆல்பம் பாடல்களிலும் சில திரைப்பட பாடல்களிலும் பாடினார்.
View this post on Instagram
சமீபமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் லில்லி என்ற துணை கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் க்யூட் காலேஜ் பெண்ணாகவும், கதாநாயகியின் தோழியாகவும், கதாநாயகன் சிவாவை சைட் அடிக்கும் பெஸ்டியாகவும் நடித்துருப்பார். இவருக்கு இன்ஸ்டாவில் இவருக்கு 4.9 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். அதனால் சிவாங்கி இன்ஸ்டாவில் செம ஆக்டிவ்.
View this post on Instagram
லீவ் டைம்மில் அடிக்கடி பல ஊர்களுக்கு பயணம் செல்வதை வழக்கமாக கொண்ட சிவாங்கி இப்போது அமெரிக்கா சென்றுள்ளார். அதில் நயகரா நீர்விழ்ச்சி அருகே குதித்தி விளையாடி கொண்டு இருக்கிறார் க்யூட்டி சிவாங்கி.இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்