Janhvi Kapoor : காரைக்குடி வாங்க! இட்லியும் கறிக் குழம்பும் சாப்பிடலாம் - நடிகை ஜான்வி கபூருக்கு கார்த்தி சிதம்பரம் அழைப்பு
Janhvi Kapoor : நடிகை ஜான்வி கபூரை காரைக்குடிக்கு ஒருமுறை வந்து இட்லியும் கறிக் குழம்பும் சாப்பிட்டு பார்க்கும் படி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் பதிவு வைரலாகி வருகிறது

ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் முத்த மகள் ஜான்வி கபூர் தற்போது தமிழ் , இந்தி, தெலுங்கு என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். பெற்றோர்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் ஜான்வி கபூர் மீது எப்போது ஊடக கவனம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜான்வி திரைப்படங்களில் நடிக்க வருவது குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு இருக்கிறார். அவர் இந்தியில் அறிமுகமான தடக் படம் வெற்றிபெற்றாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவரா படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி.
கிளாமராக ஃபோட்டோஷூட் செய்வது , திரைப்படங்களில் நடிப்பது தவிர்த்து ஒரு மனிதராக மிக சுவாரஸ்யமானவர் ஜான்வி கபூர். தொடர்ச்சியாக வாசிப்பு பழக்கம் கொண்டவர். சமீபத்தில் அம்பேத்கர் மற்றும் காந்தி ஆகிய இரு தலைவர்களைப் பற்றிய அவரது உரையாடல் சமுக வலைதளங்களில் வைரலாகி கவனமீர்த்தது.
தமிழ்நாட்டு உணவை ரசித்து சாப்பிடும் ஜான்வி
ஜான்வி கபூர் முதன்மையாக பாலிவுட் நடிகையாக கருதப் பட்டாலும் தனது அம்மாவின் சொந்த நிலமான தமிழ் நாட்டின் மீதும் ம் தமிழ் பழக்கவழக்கங்கள் மீதும் நிறைய மதிப்பு வைத்திருப்பவர் ஜான்வி கபூர். குறிப்பாக தமிழ்நாட்டின் உணவுகளின் மேல் அவருக்கு ஒரு தனிப்பிரியம் இருந்து வருகிறது. சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது விமான நிலையத்தில் அவர் ஏதோ ஒரு உணவை ஆசையாக வாங்கி சாப்பிட அவரது உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டு குணம்பெற்று திரும்பினார்
ஜான்வி கபூருக்கு அழைப்பு விடுத்த கார்த்தி சிதம்பரம்
Come to Karaikudi, will serve you the most delicious Idly, Kari Kolumbu, Chicken Vella Kurma, Fish Curry & Paya. Will go well with Dosai & Appam too. (It's a stereotypical myth that South Indians are vegetarians) pic.twitter.com/9Q1hkDsi3t
— Karti P Chidambaram (@KartiPC) July 27, 2024
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூர் தனக்கு பிடித்தமான உணவு வகைகளைப் பற்றி பேசினார். அப்போது இட்லியுடன் கறி குழம்பு தனக்கு பிடித்தமான காம்போ என்றும் தனது தந்தைக்கும் அது பிடித்தமான காம்போ என்றும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிருந்துள்ளார். இந்த பதிவில் அவர் “ ஒருமுறை காரைக்குட்டி வாங்க. இட்லி ,கறிக்குழம்பு , வெள்ள கறி குருமா , மீன் குழம்பு, பாயா என எல்லாம் சாப்பிட்டலாம் “ என்று கூறியுள்ளார். இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது





















