மேலும் அறிய

Cinema News Today LIVE : 1000 கோடி வசூலை அள்ளிய பதான் படம்!

நேற்று காலை காலமான நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

LIVE

Key Events
Cinema News Today LIVE : 1000 கோடி வசூலை அள்ளிய பதான் படம்!

Background

மறைந்த நடிகர் மயில்சாமியிடம் தான் மன்னிப்பு கேட்க நினைத்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மயில்சாமி. 57 வயதான இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார்.சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பின்னர் அதிகாலை வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக சென்னை  போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மயில்சாமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த மயில்சாமியை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்னும் அளவுக்கு பிரபலமானவர். இந்நிலையில் அவரது மறைவு செய்தி அறிந்த நடிகர் ரஜினிகாந்த், பெங்களூருவில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பினார். இன்று காலை மயில்சாமி இல்லத்திற்கு சென்ற ரஜினி, அவரது உடலுக்கு அஞ்சலி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”மயில்சாமி தன்னுடைய நீண்ட கால நண்பர் என குறிப்பிட்டார். அவரின் 23, 24 வயசுலேயே எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்டிஸ்டா இருந்து சினிமாவுக்கு வந்தவர். இரண்டு பேரின் தீவிர ரசிகர். ஒருவர் எம்ஜிஆர். இன்னொருவர் சிவன். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம்.  அப்போது சும்மா சினிமா எப்படி இருக்குன்னு கேட்பேன். மயில்சாமி என்னிடம் சினிமா பற்றி பேசவே மாட்டார். சிவன் பற்றியும், கோயில்கள் பற்றியும் தான் பேசுவார். 

இதேபோல ஒவ்வொரு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கும் அங்க போயிருவாரு. அங்க இருக்க கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு எனக்கு போன் பண்ணுவாரு. ஏதோ அவரோட முதல் படத்துக்கு வர்ற கூட்டம் மாதிரி உற்சாகமா இருப்பாரு. கடந்த கார்த்திகை தீபத்துக்கு போன் பண்ணாரு. நான் ஷூட்டிங்கில் இருந்ததால போன் அட்டெண்ட் பண்ணல. அடுத்து மூன்று முறை கூப்பிட்டுருந்தாரு. அடுத்ததாக அவரை சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க நினைத்தேன். அதை அப்படியே மறந்து போய்ட்டேன். அவர் இப்ப மறைஞ்சு போய்ட்டாரு” என வருத்ததுடன் பதிவு செய்தார். 

மேலும், “விவேக், மற்றும் மயில்சாமி ஆகிய இரு நகைச்சுவை நடிகர்களின் மரணம் சினிமா துறை மற்றும் சமூகத்திற்கு பேரிழப்பாகும். சிவராத்திரி அன்னைக்கு மயில்சாமி இறந்தது, தீவிர பக்தனை சிவன் அழைத்துக் கொண்டார் எனலாம். இது தற்செயல் அல்ல. அவனின் கணக்கு” எனவும் ரஜினி தனது பேச்சின் போது குறிப்பிட்டார். 

18:47 PM (IST)  •  20 Feb 2023

Pathaan : 1000 கோடி வசூலை அள்ளிய பதான் படம்!

சில ஆண்டுகளுக்கு பின், ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

17:12 PM (IST)  •  20 Feb 2023

Soppana Sundari : சொப்பன சுந்தரி படத்தின் கதாபாத்திர வெளியீடு

அஹிம்சா நிறுவனம் தயாரிக்கும் சொப்பன சுந்தரி படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் லேட்டஸ்ட் அப்டேட்டில், நடிகர் ஷா ரா மாறனாகவும், மைம் கோபி டேஞ்சர் மாமாவாகவும், ரெடின் கிங்ஸ்லி டிஜித்தாகவும் நடிக்கவுள்ளார்.

15:55 PM (IST)  •  20 Feb 2023

Shah Rukh Khan : ரசிகர்களுக்கு பதில் அளித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்!

ஷாருக்கான் ரசிகர் ஒருவர், ஷாருக்கானிடம் மொக்கை ஜோக் ஒன்றை கூறுமாறு கேட்டுக்கொண்டார். தற்போது, ஷாருக்கான் அந்த ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

வைரலாகி வரும் ஷாருக்கானின் வேடிக்கையான ட்வீட் : 

15:49 PM (IST)  •  20 Feb 2023

Soppana Sundari : சொப்பன சுந்தரி படத்தின் கதாபாத்திர வெளியீடு

அஹிம்சா நிறுவனம் தயாரிக்கும் சொப்பன சுந்தரி படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். தீபா ஷங்கர் செல்வி அம்மாகவும், லக்‌ஷ்மி ப்ரியா தேன்மொழியாகவும், கருணாகரன் துரையாகவும், சுனில் ரெட்டி கண்ணனாகவும் நடிக்கவுள்ளனர்.

15:39 PM (IST)  •  20 Feb 2023

Love today : ஹிந்தி ரிமேக்கிற்கு தயாராகும் லவ் டுடே!

லவ் டுடே படத்தின் இந்தி மொழி ரீமேக்கை உருவாக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் உடன் பாண்டம் ஸ்டுடியோஸ் இணைந்து செயல்படவுள்ளது.
 
Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
Lottery: ஒரே இரவில் கோடீஸ்வரரான வாட்ச்மேன் - இந்தியருக்கு அபுதாபியில் அடித்த ஜாக்பாட்..! நடந்தது என்ன?
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
எங்கும் மரண ஓலம்! 179 பேர் தீயில் கருகி உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய தென்கொரியா
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Koneru Humpy: அட்ராசக்க..! உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற கோனேரு ஹம்பி.. இந்தியாவே பெருமை..!
Embed widget