மேலும் அறிய

Cinema Headlines: ஏழு கடல் ஏழு மலை பட க்ளிம்ஸ்.. இந்தியன் 2 ஷூட்டிங்கை நிறைவு செய்த கமல்.. சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: திரையுலகில் இன்றைய அதாவது ஜனவரி 2ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

காதலில் திளைக்கும் அஞ்சலி - நிவின் பாலி.. ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் சூப்பர் அப்டேட்!

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில்,மலையாள நடிகர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகி உள்ளது. அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலமாக திரையில் தோன்ற உள்ளார். மேலும் படிக்க

இந்த ஆண்டு திருமணம்.. சர்ப்ரைஸ் தந்த நடிகர் பிரேம்ஜி.. வாழ்த்தும் ரசிகர்கள்!

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சத்தம் போடாதே உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்களிலும் பிரேம்ஜி நடித்துள்ளார்.  இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு படங்களில் நடித்திருந்தார். மேலும் படிக்க

விஜயகாந்த் சினிமாவில் மட்டும் அல்ல; அரசியலிலும் கேப்டன் தான் - பிரதமர் மோடி புகழாரம்

விஜயகாந்த் சினிமாவில் மட்டும் கேப்டன் அல்ல அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் என தெரிவித்தார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். முன்னதாக சமீபத்தில் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். மேலும் படிக்க

மீண்டும் கூட்டணி சேரும் வடிவேலு - ஃபகத் பாசில்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் இந்த முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 98வது படத்திற்கான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்த சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக மற்றொரு சர்ப்ரைஸ் தகவலையும் அறிவித்துள்ளது படக்குழு. மேலும் படிக்க

இந்தியன் 2 ஷூட்டிங் ஓவர்.. கோடை ரிலீஸ்.. படக்குழுவிடமிருந்து விடைபெற்ற கமல்ஹாசன்!

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ (Indian 2).  நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நடிகர்கள் சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மேலும் படிக்க

ஜப்பான் நிலநடுக்கத்திலிருந்து தப்பிய நடிகர் ஜூனியர் என்டிஆர்.. உருக்கமான பதிவு!

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் தங்கியிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் (Jr NTR) மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். நேற்று புத்தாண்டு தினத்தன்று ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், 30 பேர் இதுவரை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
Embed widget