Cinema Headlines: விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் அஜித்.. தி கோட், விடாமுயற்சி அப்டேட்.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: கோலிவுட் வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!
களைகட்டும் விஜய் பிறந்தநாள்! விஜய் ரசிகர்கள் செய்த காரியம்!
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் எண்ட்ரி கொடுத்த நடிகர் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் உற்சாகமாக விஜய் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மதுரை வாடிப்பட்டி பகுதியில் விஜய் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள், ஒரு நாள் முழுவதும் பயணிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கியுள்ளனர்.
மாலை வெளியாகும் தி கோட் பாடல்!
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் “சின்ன சின்ன கண்கள் சிரிக்கின்றதோ” எனும் பாடல் வெளியாக உள்ளது. தி கோட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டாவது பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் மற்றும் மறைந்த பவதாரிணி இணைந்து பாடியுள்ளனர். நேற்று இப்பாடலின் க்ளிம்ஸ் வீடியோ வெளியான நிலையில், முன்னதாக விஜய்யுடன் சினேகா இடம்பெற்றிருக்கும் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாக உள்ளது.
பேக் டு விடாமுயற்சி ஷூட்டிங், கார் ரேஸ்.. வைரலாகும் அஜித் புகைப்படங்கள்
நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் முன்னதாகக் கலந்துகொண்டு வந்த நிலையில், இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது நடிகர் ஆரவ் உடன் அஜித் இணைந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் அஜித் மீண்டும் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன, மேலும், அஜித் தன் அபிமான பொழுதுபோக்கான கார் ரேஸில் ஈடுபடும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
சமூக நீதிங்கறதே தவறு.. ஆமா நான் சாதி வெறியன் தான்.. நடிகர் ரஞ்சித் சர்ச்சைக் கருத்து!
கவுண்டம்பாளையம் படத்தினை இயக்கி நடித்துள்ள நடிகர் ரஞ்சித் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமூக நீதி பத்தி யாராவது பேசுனா எனக்கு கடும் கோபம் வரும். முதலில் சமூக நீதிங்கறதே தவறு.சமூக நீதி என ஏமாற்றும் சமூக நீதிப் போராளிகள் தங்கள் குடும்பத்தில் ஒரு சுய மரியாதைத் திருமணத்தை முதலில் செய்துவைச்சிட்டு அடுத்தவங்களுக்கு அப்பறம் கல்யாணம் செய்துவைத்தா சிறப்பு. நாடகக்காதல எதிர்ப்பதால் என்னை சாதி வெறியன்னு சொல்றீங்கனா, கையெடுத்து கும்பிடறேன், ஆமா நான் சாதிவெறியன் தான். சொல்லிக்கோங்க” எனப் பேசியுள்ளார்.
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்.. டபுள் ஆக்ஷனில் மிரட்டும் விஜய்..
ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள தி கோட் படத்தின் அப்டேட் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. தி கோட் விஜய் பர்த்டே ஷாட்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், இரு வேறு கதாபாத்திரங்களில் ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில், மாஸாக விஜய் பைக்கில் பயணிக்கும்படியான காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.