Cinema Heaadlines : தொடங்கியது ரஜினியின் வேட்டையன் டப்பிங்; ராயன் ஆடியோ லாஞ்சில் தனுஷ்: சினிமா செய்திகள் இன்று
July 7th Cinema Heaadlines : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் டப்பிங் முதல் முதல் ராயன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் மாஸான உரை வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்
வேட்டையன்
ரஜினியின் 170 ஆவது படமாக உருவாகியுள்ளது வேட்டையன். லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை த.செ ஞானவேல் இயக்கியுள்ளார். ஃபகத் ஃபாசில் , அமிதார் பச்சன் , துஷாரா விஜயன் , மஞ்சு வாரியர் , உள்ளிட்ட்வர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது படத்திற்கான டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடிகர் ஃபகத் ஃபாசில் தனது பகுதிகளுக்கான டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
ராயன் ஆடியோ லாஞ்சில் மாஸ் காட்டிய தனுஷ்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் தனுஷ் படத்தில் நடித்த நடிகர்கள் பற்றியும் தனுஷ் மீது சமீப காலத்தில் பரப்பப் படும் விமர்சனங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். நடிகர் தனுஷ் போயஸ் கார்டனின் வீடு கட்டியது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து பேசுகையில் ”
போயஸ் கார்டனில் வீடு கட்டியது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என்று தெரிந்திருந்தால் நான் இந்த வீட்டை கட்டியிருக்கவே மாட்டேன். நான் யாருடைய ரசிகன் என்பது உங்களுக்குத் தெரியும். ரஜினி சாரின் வீடும் போயஸ் கார்டனில் தான் இருக்கிறது. எனக்கு 16 வயது இருக்கும்போது நான் போயஸ் கார்டன் தெருவுக்குச் சென்றேன். ரஜினி வீட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அங்கு இருந்த காவலர்களிடம் கெஞ்சி ரஜினி வீட்டை பார்த்தேன். பக்கத்திலேயே ஜெயலலிதாவின் வீடும் இருந்தது. நாமும் போயஸ் கார்டனில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று அப்போது ஆசை வந்தது. அந்த விதை அன்று விழுந்தது. அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவுக்கு இந்த தனுஷ் கொடுத்த பரிசு தான் போயஸ் கார்டனில் நான் கட்டிய வீடு. நான் யார் என்று அந்த சிவனுக்குத் தெரியும். என் அம்மா அப்பாவிற்கு தெரியும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்றார்’
செல்வராகவன் பற்றி தனுஷ்
தனது அண்ணன் செல்வராகவன் பற்றி தனுஷ் பேசும்போது “
ஒன்றுமே தெரியாத என்னை நடிகனாக்கியது என் அண்ணன் செல்வராகவன்தான் . அவன் தான் எனக்கு ஆசான். அவர்தான் என் குரு. எனக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்தது என் அண்ணன்தான். எனக்கு சாப்பிட சொல்லிக் குடுத்தது அவர்தான். கண்ணம்மா பேட்டையில் ஒரு குடிசையில் இருந்த என்னை போயஸ் கார்டன் வரை கொண்டு வந்தது அவர்தான்.
படப்பிடிப்பில் மற்ற நடிகர்களுக்கு இரண்டாவது டேக் சென்றால் நான் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு இரண்டாவது டேக் சென்றால் நான் சந்தோஷப்படுவேன். ஏனால் அவருடைய படங்களில் என்னை அவ்வளவு டார்ச்சர் செய்திருக்கிறார். அதனால் அதே டார்ச்சரை அவருக்கு நான் செய்யும்போது நான் அதை ரசித்தேன்" என்று பேசியுள்ளார்”