Cinema Headlines : திரையரங்கில் வெளியான தனுஷின் ராயன் மற்றும் டெட்பூல் & வுல்வரின் ...சினிமா செய்திகள் இன்று
July 26 Cinema Headlines : திரையரங்கில் வெளியான தனுஷின் ராயன் முதல் டெட்பூல் & வுல்வரின் வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்
ரசிகர்கள் கொண்டாடும் ராயன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சந்தீப் கிஷன் , காலிதாஸ் ஜெயராம் , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
காத்தவராயன் ( தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். மூத்தவரான காத்தவராயன் ( தனுஷ்) தன் தம்பி தங்கச்சியின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்
மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ். இந்த கொலைகார கும்பலிடம் இருந்து ராயன் தனது குடும்பத்தை காப்பாறினாரா. ஒருவேளை ராயன் உயிருக்குயிராக நினைக்கும் அவன் தம்பிகள் அவனுக்கே எதிராக திரும்பினால்? ஆக்ஷன் எமோஷன் என தொடர்கிறது ராயன் படத்தின் கதை...
மேலும் படிக்க : Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!
டெட்பூல் & வோல்வரின்
விமர்சன ரீதீயாக தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் மார்வெல் நிறுவனத்திற்கு, மல்டிவெர்ஸ் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது டெட்பூல் & வோல்வரின் திரைப்படம். ஒரு பக்கம் ராயன் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருவது போலவே இன்னொரு பக்கம் இப்படமும் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
மேலும் படிக்க : Deadpool & Wolverine Review: மார்வெலை காப்பாற்றியதா? டெட்பூல் & வோல்வரின் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
காந்தாரா 2
காந்தாரா படத்தின் முதல் பாகம் பான் இந்திய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. முதல் பாகத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடியை தொடும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் செட் அமைக்காமல் நிஜ லொகேஷன்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே நேரம் படத்தில் நிறைய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் இந்த காட்சிகளை உலகதரத்தில் படக்குழு உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் 20 நாட்களே படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் காந்தாரா 2 அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.