Oppenheimer Box Office: உள்ளூர்காரங்க ஓரமா போங்க... இந்தியாவில் 10 நாள்களில் 100 கோடி வசூல்... தெறிக்கவிடும் ‘ஓப்பன்ஹெய்மர்’!
இந்திய திரையரங்குகளில் 100 கோடியை தொட்ட வெகு சில ஹாலிவுட் படங்களில் ஓப்பன்ஹெய்மர் படமும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கி, கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட், ராபர்ட் டெளனி ஜூனியர், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லுட்விக் கோரான்ஸன் இசையமைத்து ஹோய்டே வான் ஹோய்டெமா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதைச்சுருக்கம்
புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஓப்பன்ஹெய்மர். இயற்பியல் விஞ்ஞானியான ஓப்பன்ஹெய்மர், ஹிட்லரின் நாஜிப்படையை தோற்கடிக்க அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அவரது கண்டுபிடிப்பு ஏற்படுத்தும் பேரழிவுகளைக் கண்டு கடும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி அணு ஆயுதத்துக்கு எதிராக பேசத் தொடங்குவதால், அவரை கம்யூனிஸ ஆதரவாளராகக் கருதி அவர் மீது விசாரணை நடத்துகிறது அவரது நாடான அமெரிக்கா. ஆக்கும் சக்தியாக இருந்த அறிவியல் அழிக்கும் சக்தியாக மாறிய இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தின் அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது ஓப்பன்ஹெய்மர் படம்.
பலத்த வரவேற்பு
உலகம் முழுவதும் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவிற்கான வரவேற்பு இருந்து வந்தது. மேற்கு நாடுகளில் மட்டுமில்லாமல் இந்தியாவில் ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாவதற்கு முன்பாக மொத்தம் 3 லட்சம் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.
பகவத் கீதை சர்ச்சை
இதற்கிடையில் படத்தில் இடம்பெற்ற உடலுறவு காட்சியின் போது பகவத் கீதை வாசகங்கள் இடம்பெற்றது சர்ச்சைக்கு உள்ளாகியது. இதன் காரணத்தினால் இந்து மதச் சார்பாளர்கள் இந்தப் படத்தை தடை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைகளுக்கு மத்தியிலும் திரையரங்கங்களில் படத்திற்கான கூட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 21 ஆம் தேது வெளியாகி ஒப்பன்ஹெய்மர் திரைப்படம் இன்றுடன் திரையரங்கங்களில் 10 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த பத்து நாளில் 100 நூறு கோடி வசூலை எட்டியுள்ளது படம்.
முதல் நாள் வசூல
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 29 மில்லியன் டாலர்களும் இந்தியாவில் 13.50 கோடியும் வசூல் செய்தது.
தொடர் வசூல் வேட்டை
#OppenheimerInIMAX #OppenheimerMovie
— Cineobserver (@cineobserver) July 30, 2023
The film' s collections at the Indian box-office have crossed Rs. 100 crores!
Are you part of the 100cr gang yet? Watch Oppenheimer in cinemas now!#ChristopherNolan @UniversalIND @UniversalPics@rs_prakash3 pic.twitter.com/m82E9by2lH
அடுத்தடுத்த நாட்களில் நிதானமாக களமாடிய ஓப்பன்ஹெய்மர் சீரான வசூலை ஈட்டி வந்தது . தற்போது இன்றுடன் படம் வெளியாகி 10 ஆவது நாளாக இந்திய அளவில் மொத்தம் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது ஓப்பன்ஹெய்மர் திரைப்படம். இந்திய திரையரங்குகளில் 100 கோடியை தொட்ட வெகு சில ஹாலிவுட் படங்களில் ஓப்பன்ஹெய்மர் படமும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.