மேலும் அறிய

Rajinikanth: ஸ்ரீதேவியை கல்யாணம் பண்ண நினைத்த ரஜினி.. எமனாக வந்த மின்சாரம்.. கடைசியில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் சில ஹீரோயின்களும் தங்கள் ஆளுமையை நிரூபித்தார்கள். அதில் மிக முக்கியமானவர் ஸ்ரீதேவி.

பிரபல நடிகர் ரஜினி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்ய நினைத்ததாக , பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் நேர்காணலில் தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் சில ஹீரோயின்களும் தங்கள் ஆளுமையை நிரூபித்தார்கள். அதில் மிக முக்கியமானவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக அடியெடுத்து வைத்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். போனி கபூரை திருமணம் செய்த அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். போனி கபூரும் தற்போது படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

ஆனால் ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி துபாயில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். அவரது மரணம் இன்றளவும் பலராலும் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் ரஜினி - நடிகை ஸ்ரீதேவி தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சில தகவல்களை நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

அதாவது, “ஸ்ரீதேவி ரஜினியை காதலித்தாரா என்பதில் உறுதியான தகவல் இல்லை. ஆனால் ரஜினி ஸ்ரீதேவியை காதலித்தார் என்பது நிஜம். இதைப்பற்றி இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியை திருமணம் செய்ய நினைத்து பெண் கேட்க, அவரின் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு நானும், ரஜினியும் சென்றிருந்தோம். ஸ்ரீதேவியின் தாயாரிடம் ரஜினி அன்றைக்கு தான் அதைப் பற்றி பேசுவதாக இருந்தது.

நாங்கள் அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீடு முழுவதும் இருள் சூழ்ந்தது. அந்த செண்டிமெண்ட் காரணமாக அன்றைக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்துக் கொள்வது பற்றி பேசாமலேயே ரஜினிகாந்த் திரும்பி வந்து விட்டார். அன்றைக்கு அந்த மின்சாரம் தடை ஏற்படாமல் இருந்திருந்தால் ஸ்ரீதேவியை திருமணம் செய்வது பற்றி அவரது தாயாரிடம் ரஜினி பேசியிருப்பார் என மகேந்திரன் தெரிவித்திருப்பார்’ என சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். இந்த வீடியோ பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

ரஜினியும், ஸ்ரீதேவியும் இணைந்து மூன்று முடிச்சு,காயத்ரி, கவிக்குயில், பிரியா, 16 வயதினிலே, போக்கிரி ராஜா வணக்கத்துக்குரிய காதலியே, தர்ம யுத்தம், ஜானி, ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?
Suriya: அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் அம்மா வாங்கிய கடன்.. சூர்யா நடிக்க வந்த கதை தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget