Cinema Round-up: தல ரசிகர்கள் கொண்டாட்டம்..! பொன்னியின் செல்வன் பாடல் வீடியோ ரிலீஸ்..! இது சினிமா ரவுண்ட்-அப்..
Cinema Round-up : துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் முதல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம் வரை.. ட்ரெண்டிங்கான 5 சினிமா செய்திகள் உள்ளே!
சில்லா சில்லா பாடல்
துணிவு படத்தின் முதல் சிங்களான சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9 ஆம் தேதியான இன்று மாலை 5 வெளியாகவுள்ளதாக தகவல் வந்தது. இதனையொட்டி ட்விட்டரில், சில்லா சில்லா என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜித்தின் ரசிகர்கள், பலர் இப்பாடலின் ரிலீஸை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
Expecting #ChillaChilla song from #AK 's #Thunivu around 5 PM this evening.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) December 9, 2022
Get ready fans for the storm..
அத்துடன், லண்டனில் துணிவு படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கவுள்ளது. படத்தின் ரிலீஸ் டேட் குறித்து வெளிநாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் தெரிவித்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவவில்லை என்பது குறிப்படதக்கது.
பொன்னியின் செல்வனின் சொல் பாடல் ரிலீஸ்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த பொன்னியின் படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டராக அமைந்து, ஒவ்வொரு பாடலும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற ‘சொல்’பாடல் உள்பட பல காட்சிகளும் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டன. எனினும் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுமாறு படக்குழுவினரிடம் தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி, நேற்று சொல் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மகிழ்வித்தது. மேலும். வந்தியத்தேவனும் குந்தவையும் முதன்முதலாக சந்தித்துக் கொள்ளும் காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காட்சியையும் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பா.ரஞ்சித்தின் பிறந்தநாளையொட்டி வெளியான தங்கலான் போஸ்டர்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் 'தங்கலான்'. 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Happy birthday #Sarpatta all the best for your #Thangalan@beemji pic.twitter.com/AMBjD5nRF4
— விடுதலைவேந்தன் (@NKalaivendhan) December 8, 2022
பா. ரஞ்சித் பிறந்தநாளையொட்டி நேற்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது.
கலவை விமர்சனங்களை பெற்று வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
இன்று வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் திரையிடப்பட்ட ப்ரீமியர் ஷோவில், இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள், “பழைய வடிவேலு மீண்டும் வந்துவிட்டார்” என்ற பாசிட்டிவான விமர்சனங்களை முன் எடுத்து வைக்கின்றனர். மக்கள் தொடர்பாளர்களிடம் இருந்து வரும் விமர்சனங்களை விட, பொது மக்கள் கூறும் கருத்துக்களே நியாமாகவும் உண்மையாகவும் இருக்கும். அப்படி பார்த்தால் நாய் சேகர் படம், காமெடியாக இருப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் குழந்தைகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் கூறிவருகின்றனர். அத்துடன் சந்தோஷ் நாராயணின் இசை பிரமாதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Unexpectedly NaaiSekarReturns Getting positive Reviews from Public 🥳#NaaiSekarReturns #SaNa
— SHIVASK (@SHIVAYESKAY) December 9, 2022
விமர்சகர்கள் சிலர், இப்படத்தில் வடிவேலுதான் முக்கிய தூணாக அமைந்து இருக்கிறார். பழைய வடிவேலுவை மீண்டும் கொண்டு வர இயக்குநர் முயற்சி செய்துள்ளார் ஆனால், அது வொர்க்-அவுட்டாகவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.
ட்ரெண்டாகும் பாலிவுட் ஜோடி
Latest selfie of #KatrinaKaif-#VickyKaushal!#Katrina #Vicky #CelebrityClicks #FilmyTheory pic.twitter.com/N0BEwcWcvX
— Filmy Theory (@FilmyTheory) December 6, 2022
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனாவிற்கும் விக்கி கெளஷலிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி கல்யாணம் நடைபெற்றது.தற்போது, இந்த தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண விழாவை இன்று கொண்டாடவுள்ளனர். இதனால், இவர்கள் இருவரின் புகைப்படங்கள் ட்ரெண்டாகவுள்ளது.