CIFF 2022: சென்னை திரைப்பட திருவிழாவில் இன்று திரையிடப்படும் படங்களின் லிஸ்ட்; முழு விபரம் உள்ளே!
சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் இன்று பல மொழி திரைப்படங்கள் திரையிடப்படும் நிலையில் அதன் விவரங்களை காணலாம்
சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் இன்று பல மொழி திரைப்படங்கள் திரையிடப்படும் நிலையில் அதன் விவரங்களை காணலாம்
சென்னை சர்வதேச திரைப்பட விழா
கோவா, கேரளா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து சென்னையில் நடைபெறும் திரைப்பட விழா ரசிகர்களிடையே புகழ் பெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.
திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்
ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் இடம் பெறுகின்றன.
எங்கு காணலாம்?
சென்னை சத்யம் சினிமாஸில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 ஸ்க்ரீன்களில் நாள் ஒன்று 4 காட்சிகள் வீதம் 20 படங்கள் திரையிடப்படுகிறது.
படங்கள் திரையிடப்படும் நேரங்கள்
ஒவ்வொரு தியேட்டரிலும் காலை 10, 10.15, 12.15, 12.30, 12.45, 1 மணி ஆகிய நேரங்களிலும், இதேபோல் 2.30, 3, 3.30, 4.30, 4.45, 5, 6.30, 7, 7.15 ஆகிய நேரங்களிலும் படங்கள் திரையிடப்படுவதால் சரியான நேரங்களை கண்டறிந்து உங்கள் ஃபேவரைட் படங்களை கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது?
Screen | காலை | நண்பகல் | மதியம் | மாலை | இரவு |
Santham (sathyam cinemas) |
My Girlfriend Is the Revolution (world cinema) |
The Divide (world cinema) |
Tchaikovsky's Wife (world cinema) |
Triangle of Sadness (world cinema) |
|
Serene (sathyam cinemas) |
Pratikshya (Indian Panorama) |
Ekda Kaay Zala (Indian Panorama) |
Appan (Indian Panorama) |
Leilas Brothers (world cinema) |
|
Seasons (sathyam cinemas) |
The Game (world cinema) |
ANN (world cinema) |
Irudhi pakkam (tamil feature film competition) |
Beginning (tamil feature film competition) |
|
6 Degree (sathyam cinemas) |
Balaban
(world cinema) |
Master classes (Conversation Session) |
pierrot the fool (Homage) |
Queens (world cinema) |
Semret (world cinema) |
Anna theatre |
Leonor Will Never Die (world cinema) |
Beautiful Beings (world cinema) |
Under the Fig Trees (world cinema) |
Wolka (world cinema) |
மேலும் விபரங்களுக்கு
மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இந்த திரைப்பட விழாவை காண மாணவர்கள், திரைப்பட துறையினர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற பொதுமக்களுக்கு ரூ.1000 டிக்கெட் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.