மேலும் அறிய

”வேட்டையன் பராக்! பராக் !” அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது ‘சந்திரமுகி 2’

சந்திரமுகியால் பழி வாங்கப்பட்ட வேட்டையன் , எப்படி மீண்டும் அவளை பழி வாங்குகிறான் என்பதே ஒன்லைன் என தகவல்கள் வெளியாகின.

சூப்பர் ஸ்டார் நடிப்பில்  கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ சந்திரமுகி’. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர்,வடிவேலு, வினித், மாளவிகா என பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். இந்நிலையில் படம் வெளியான சில ஆண்டுகளிலேயே படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க இயக்குநர் திட்டமிட்டு வந்தார் . அவ்வபோது படத்தின் கதாநாயகன் மற்றும் தாயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன. ஆனால் படத்தின் படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கவே இல்லை.  இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.  இந்நிலையில் படத்திற்காக செடியூள் போடப்பட்டுவிட்டதாக சில அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 


”வேட்டையன் பராக்! பராக் !” அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது ‘சந்திரமுகி 2’

 படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்க , நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். சந்திரமுகி 2 படத்தினை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கடந்த மே  மாதமே இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படம் தள்ளிபோனது. இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளாராம் இயக்குநர் பி.வாசு. சந்திரமுகி 2 ஆனது அடுத்த ஆண்டு திரைக்கு வர இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரமுகி முதல் பாகத்தை போலவே இதிலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது என  கூறப்படுகிறது. ஆனால் முதல் பாகத்தை விட இதில் த்ரில்லிங் காட்சிகளை கூடுதல் படுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர். 



”வேட்டையன் பராக்! பராக் !” அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது ‘சந்திரமுகி 2’


கடந்த 1993 ஆம் ஆண்டு  சோபனா, மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி  சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மணிசித்ரதாழ்’ என்ற படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி .  தமிழில் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து  சந்திரமுகி 2 படம் உருவாக உள்ளது. படத்தில் சந்திரமுகியாக நடிக்க  சிம்ரன் ,கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்யலாமா அல்லது ஜோதிகாவையே ஒப்பந்தம் செய்யலாமா என்ற பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக செய்திகள் வெளியாகின.  ஆனால் இதனை மறுத்த படத்தின் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் “ தற்போது கதை எழுதும் பணி  நடந்துக்கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் தயாரிப்பு நிறுவனம் ஹீரோயினை அறிவிப்பார்கள்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். தற்போது படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதால் விரைவில் நடிகைகள் உள்ளிட்ட பிற நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  சந்திரமுகியால் பழி வாங்கப்பட்ட வேட்டையன் , எப்படி மீண்டும் அவளை பழி வாங்குகிறான் என்ற ஒன் லைனை கொண்டுதான் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியன. குறிப்பாக வேட்டையன்  கதாபாத்திரம் இதில் கொடூரமான பேயாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது . இதன் உண்மைத்தன்மை அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் நமக்கு தெரியவரும்.

 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget