மேலும் அறிய

Cannes 2022: கேன்ஸ் திரைப்பட விழா ஜூரி உறுப்பினரானார் தீபிகா படுகோனே!

Cannes 2022 Deepika Padukone: 2017 ஆம் ஆண்டு சிகப்பு கம்பளத்தில் கம்பீர நடைபோட்ட, தீபீகா படுகோனே, வரும் கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே (Deepika Padukone), நடக்க இருக்கும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) திரைப்பட தேர்வாளர் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival). இந்த விழாவில், உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் பங்குபெறும். இதிலிருந்து  நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்படும்  கலைப்படைப்புக்கு விருது வழங்கப்படும். மேலும், இவ்விழாவில், உலகில் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் தேர்தெடுக்கப்பட்டு ப்ரிவியூ காட்சிகள் திரையிடப்படும். இந்த திரைப்பட விழா,  திரைத்துறை கலைஞர்களுக்கான தனிப்பட்ட விழா. அதனால், பொதுமக்களுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அவர்களின் விண்ணப்பப் படிவங்களை ஜூரிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களுக்கு ’கேட் ஓபன்’ என்ற நிலை.

இப்படியான திரைப்படவிழாவின் ஜூரி உறுப்புனர்களில் இந்தியாவின் சார்பில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழா நிர்வாகம் நேற்று ஜூரி பட்டியலை வெளியிட்டது.

பிரபல பிரான்ஸ் நடிகர் வின்சண்ட் லிண்டன் (Vincent Lindon) ஜூரி குழுவின் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இந்த ஜூரி குழுவில்  பிரிட்டிஷ் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ரெபாக்கா ஹால்  (Rebecca Hall), மற்றும் சில முக்கிய பிரபலங்களுடன் நடிகை தீபிகா படுகோனும்  உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர்களால் தேர்தேடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு  பால்ம் டி டோன் (Palme d’Or )விருது வழங்கப்படும்.

வரும் மே மாதாம் 17 ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழா தொடங்க இருக்கிறது. மே 28 ஆம் தேதி நடைப்பெறும் பிரம்மாண்ட விழாவில், விருதுகளை ஜூரி அறிவிப்பார்கள்.

பாலிவுட் பிரபலம் நடிகை தீபிகா படுகோனே கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு ஜூரியாக நியமிக்கபப்ட்டிருப்பதற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget