Watch Video: "இதுதான் பாம்பு" விமான நிலையத்தில் சன்னிலியோன் செய்த காரியத்தை பாருங்க!
மும்பை விமான நிலையத்தில் பாலிவுட் நடிகை சன்னிலியோன் நிருபர்களிடம் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக உலா வருபவர் சன்னி லியோன். இவர் பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வருகிறார். இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
சன்னி லியோனின் சேட்டை:
இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் சன்னி லியோன் சென்று கொண்டிருந்தார். அப்போது வழக்கம்போல அவரை புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அவர் தனது கையில் விமான பயணத்தின்போது கழுத்து வலி தெரியாமல் இருப்பதற்காக பயன்படுத்தும் பஞ்சால் ஆன வளையம் போன்ற தலையணையை கையில் வைத்திருந்தார்.
அப்போது, அதை அவர்களிடம் காட்டி இது என்ன தெரியுமா? இது என்ன தெரியுமா? என்று கேட்டார். அதற்கு பத்திரிகையாளர்கள் என்னவென்று கேட்டதற்கு அதற்கு அவர் இது பாம்பு என்றார். பின்னர், அவரை புகைப்படம் எடுத்தவர்களிடம் குட் நைட் என்று கூறினார். அவர்களும் பதிலுக்கு குட் நைட் என்று கூறியதுடன், அவர் பாம்பு என்று கூறிய தலையணைக்கும் குட்நைடை் என்று கூறினர்.
Sunny Leone हुईं Mumbai Airport पर Spot.#sunnyleone #spotted #mumbaiairport #trendingreels #InKhabar pic.twitter.com/UItubweDPK
— InKhabar (@Inkhabar) August 2, 2024
குட் நைட்:
அதற்கு அந்த தலையணையை வைத்து பாம்பு போல சைகை காட்டியதுடன் குட் நைட்.. டேக் கேர் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். சன்னி லியோனுக்கு என்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் நடிகர் ஜெய் நடித்த வடகறி என்ற படத்தின் மூலமாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி அறிமுகமானார்.
சன்னி லியோன் கடந்த 2012ம் ஆண்டு ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலமாக இந்தியில் அறிமுகமானார். தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். கன்னடத்திலும் டிகே, லவ் யூ லைலா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில் பிரதானமாக நடித்த வரும் சன்னி லியோன் தமிழ் தெலுங்கு மட்டுமின்றி மராத்தி, மலையாளத்திலும் நடித்துள்ளார்.
தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் முழுநீள ஹீரோயினாக நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சிகளில் நடித்துள்ளார். 43 வயதான சன்னிலியோன் கைவசம் தற்போது தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் நடித்து வருகிறார்.